Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

அடுத்த வருஷம் ஜனவரி மாசம் ஐபிஎல் வீரர்களை ஏலம் விடப் போறாங்கோ!

Posted by:
Published: Thursday, November 22, 2012, 11:25 [IST]
 

அடுத்த வருஷம் ஜனவரி மாசம் ஐபிஎல் வீரர்களை ஏலம் விடப் போறாங்கோ!
 

மும்பை: 6வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறப் போகிறதாம். மேலும் இந்த ஏலம் சென்னை அல்லது கொல்கத்தாவில் நடைபெறுமாம்.

ஜனவரி 12ம் தேதி இந்த ஏலம் தொடங்கும் என்று தெரிகிறது. சென்னையில் தொடங்கி கொல்கத்தாவில் ஏலம் தொடர்ந்து எட்டு நாட்களுக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, கிரிக்கெட் வாரியத்திற்கும், கொல்கததா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான சில பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ. 1 கோடி அபராதம் தரும் என்றும் தெரிகிறது. கிரிக்கெட் வாரியம் மீது கோர்ட்டில் வழக்குப் போட்டதற்காக இந்த தண்டமாம்.

பாகிஸ்தான் அணி வருகிறது

6வது ஐபிஎல் தொடரில் பாகிஸ்தானின் சியால்கோட் ஸ்டாலியன் அணி பங்கேற்கும் என்றும் தெரிகிறது. இதுதொடர்பாக ஏலத்திற்கு முன்பாகவே ஐபிஎல் நிர்வாகக் குழு கூடி விவாதிக்கும்.

2008ம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத சம்பவத்திற்குப் பின்னர் பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த யாரும் ஐபிஎல் தொடர்களில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A day after BCCI announced Pepsi as the title sponsors for the sixth edition of Indian Premier League, the governing council of IPL, also confirmed that the players auction will be held at Chennai or Kolkata in January 2013.
கருத்தை எழுதுங்கள்