Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வரும்போதெல்லாம் ஒரே பரபரப்புதான்!

Posted by:
Updated: Thursday, November 22, 2012, 13:12 [IST]
 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வரும்போதெல்லாம் ஒரே பரபரப்புதான்!
டெல்லி: அதென்னமோ தெரியவில்லை... இங்கிலாந்து கிரிக்கெட் அணி எப்போதெல்லாம் இந்தியா வருகிறதோ... அப்போது பரபரப்பு பற்றிக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது.

இதற்கு முன்பும்கூட இங்கிலாந்து அணி இந்தியா வந்த போதுதான் இந்திரா காந்தி கொலையில் ஆரம்பித்து போபால் விஷவாயு கசிவு சம்பவம் வரை நடந்தது.

இப்போது, அதே இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் கசாப் தூக்கிலிடப்பட்டுள்ளான்.

1984 இங்கிலாந்து டூர்!

1984-ம் ஆண்டு இங்கிலாந்து அணி அப்போதுதான் இந்தியா வந்திறங்கியது. அடுத்த சில மணி நேரங்களில், பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதட்டம், கலவரங்கள் காரணமாக இங்கிலாந்து அணி கிட்டத்தட்ட ஹோட்டலிலேயே சிறை வைக்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமானது.

அதேபோல போபாலில் விஷவாயுக் கசிவு விபத்து நடந்த சமயத்தில்தான், தனது அபார்ட்மென்டில் காக்டெயில் பார்ட்டி நடத்திய பிரிட்டிஷ் தூதர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா ஒரு டெஸ்டில் வென்றிருந்தன. கொல்கத்தா டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில் அணியை திரும்ப அழைத்துக் கொண்டது பிரிட்டிஷ் அரசு.

1993-ம் ஆண்டு இங்கிலாந்து டூர்...

1993-ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியா வந்திருந்த சமயத்தில்தான், மும்பையில் மதக் கலவரம் பெரிதாக வெடித்தது. மும்பையில் நடக்கவிருந்த மூன்றாவது டெஸ்ட்டுக்கான ஆடுகளம் பாதிக்கப்பட்டது. இருந்தாலும் கலவரங்களுக்குப் பிறகு வான்கடே ஸ்டேடியத்தில் போட்டி நடந்தது. இந்தியா 3-0 என்ற கணக்கில் அந்த டெஸ்டில் வென்றது.

2008 பயணத்தின்போது கசாப் அன் கோவின் வெறியாட்டம்

அதேபோல 2008-ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியாவுக்குப் பயணம் செய்த போதுதான், மும்பையில் கசாப் உள்ளிட்ட 10 பாகி்ஸதான் தீவிரவாதிகளின் 3 நாள் தீவிரவாதத் தாக்குதல் நடந்தது.

இதனால் 7 ஒரு நாள் போட்டிகளில் ஆட வேண்டியிருந்த இங்கிலாந்து அணி, 5 போட்டிகளுடன் நிறுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று. இரண்டு போட்டிகளை கேன்சல் செய்ததால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 17 மில்லியன் பவுண்ட் நஷ்டமானது. தொடர்ந்து ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி, பாகிஸ்தான் டூர் போன்றவற்றையும் ரத்து செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

இப்போது நான்காண்டுகள் கழித்து, மீண்டும் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது இங்கிலாந்து அணி. இப்போது 2008 தீவிரவாத செயல்களுக்கு காரணமானவர்களில் ஒருவனான கசாபை தூக்கிலிடப்பட்ட சூழலில் மீண்டும் பரபரப்புக்குள்ளாகியுள்ளது. காரணம், இந்த பரபரப்பான சூழலில், அதே வான்கடே ஸ்டேடியத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியை ஆடவிருக்கிறது இங்கிலாந்து.

19984 முதல் 2012 வரை, எப்போதெல்லாம் இங்கிலாந்து அணி மும்பையில் விளையாட களமிறங்குகிறதோ... அப்போது இந்தியாவில் இதுபோன்ற பரபரப்பான சூழலில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் இந்த முறை எந்த பாதிப்புமின்றி விளையாட்டு தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது!

Story first published:  Thursday, November 22, 2012, 7:51 [IST]
English summary
Now, four years after the attack, England are back in India, and the man who was arrested then during the attacks, has been hanged on Wednesday (21 Nov - five days ahead of the fourth anniversary of Mumbai terror attacks). Interestingly, England cricket Team is supposed to play their second Test match at Wankhede Stadium in Mumbai.
கருத்தை எழுதுங்கள்