Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

மும்பை டெஸ்ட் கிரிக்கெட் - புஜாரா அபாரம்! மீண்டும் சதம்! அரை சதம் கடந்தார் அஸ்வின்!

Posted by:
Updated: Friday, November 23, 2012, 17:09 [IST]
 

மும்பை: இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்களை எடுத்திருக்கிறது. புஜரா சதமடித்த கையோடு 114 60 ரன்களுடனும் அஸ்வின் அரை சதத்தை கடந்த நிலையில் 60 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருக்கின்றனர்.

மும்பை டெஸ்ட் கிரிக்கெட் - புஜாரா அபாரம்! மீண்டும் சதம்! அரை சதம் கடந்தார் அஸ்வின்!
இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. உமேஷ் யாதவுக்குப் பதிலாக ஹர்பஜன்சிங் களமிறக்கப்பட்டார். தொடக்க வீரர்களாக ஷேவாக்கும் காம்பீரும் களம் இறங்கினர். முதல் ஓவரின் முதல் பந்தில் ஒரு பவுண்டரி அடித்த காம்பீர், அடுத்த பந்திலேயே அவுட் ஆனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் ஷேவாக்குடன் இளம் வீரர் புஜாரா இணைந்து ஆடினார். ஷேவாக்கின் 100-வது டெஸ்ட் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஏமாற்றாமல் விளையாடி வந்த ஷேவாக் 30 ரன்களிலேயே அவுட் ஆகிப் போனார்.

எப்பொழுது ஓய்வு பெறுவார்? என்ற கேள்விக் கணைகளைத் தாங்கிக் கொண்டிருக்கும் சச்சின், சொந்த மைதானமான மும்பையில் பதில் கொடுப்பார் என்று கூறப்பட்ட நிலையில் 8 ரன்களில் ஆட்டமிழந்துவிட்டார். அவர் ஓய்வுபெறத்தான் வேண்டும் என்பதையே வெளிப்படுத்தியது அவரது ஆட்டம். பின்னர் கோஹ்லி 19 ரன்கள் எடுத்து அவுட் ஆக அடுத்து வந்த யுவராஜ்சிங் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனர். கேப்டன் டோனியும் புஜராவும் இணைந்து நம்பிக்கை ஊட்டும் விதமாக ஆடினர். ஆனால் இந்திய அணி 169 ரன்கள் எடுத்த நிலையில் டோனியும் அவுட் ஆகினார். அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்த புஜாரா இன்றும் சதமடித்து அபார ஆட்டத்தை தொடர்ந்தார். பந்துவீச்சில் அப்படி அஸ்வின் கை கொடுத்தாரோ அதேபோல் இன்று புஜராவுக்கு அஸ்வின் கை கொடுக்க இந்திய அணி நிலைத்து ஆடியது. அஸ்வின் 84 பந்துகளில் 60 ரன்களைக் குவித்திருந்தார். இதில் 9 பவுண்டரிகள் அடக்கம். புஜாரா 114 ரன்களுடனும் அஸ்வின் 60 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கின்றனர். இன்றைய ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 266 ரன்களை எடுத்திருந்தது. இங்கிலாந்து அணியின் பனேசர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Story first published:  Friday, November 23, 2012, 9:19 [IST]
English summary
India suffered a setback on the eve of the second Test, which will commence at the Wankhede Stadium here on Friday, with Umesh Yadav’s unavailability due to a lower back ailment.
கருத்தை எழுதுங்கள்