Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

எதிர்பாராதது கோஹ்லியின் ஆட்டம்... எதிர்பார்த்து ஏமாற்றியவர் ரோகித் சர்மா: ஸ்ரீகாந்த்

Posted by:
Published: Friday, November 23, 2012, 10:47 [IST]
 

எதிர்பாராதது கோஹ்லியின் ஆட்டம்... எதிர்பார்த்து ஏமாற்றியவர் ரோகித் சர்மா: ஸ்ரீகாந்த்
 

சென்னை: இந்திய அணியின் இளம் வீரர்களில் யாரும் எதிர்பார்க்காத அளவில் நன்றாக விளையாடுவது விராட் கோஹ்லி என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். அதேபோல் நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் கொடுத்தது ரோகித் சர்மா என்றும் கூறினார்.

இந்திய கிரிக்கெட் உலகில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்திற்கு தனி இடம் உண்டு. 1980 களில் அதிரடி ஆட்டக்காரராக அறியப்பட்டவர். சன் டிவியின் சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் இன்றைய சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார் ஸ்ரீகாந்த். 1983 உலகப் போட்டியை இந்திய கிரிக்கெட் அணி வென்றது முதல் தற்போதைய இந்திய அணி விளையாட்டு வீரர்கள் வரை நேயர்களிடம் பகிர்ந்து கொண்டார் ஸ்ரீகாந்த்.

கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த ஸ்ரீகாந்த் இன்றைய இளம் வீரர்களில் யாரும் எதிர்பாராத அளவில் சிறப்பான ஆட்டத்தை விராட் கோஹ்லி வெளிப்படுத்துவதாக கூறினார். அதேசமயம் நன்றாக விளையாடுவார் என எதிர்பார்த்து சரியாக விளையாடாமல் போனது ரோகித்சர்மா என்றும் குறிப்பிட்டார்.

1983ல் உலகப் கோப்பையை இந்தியா வென்றபோது அந்த அணியில் தான் பங்கேற்றதை குறிப்பிட்ட ஸ்ரீகாந்த், தற்போது இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற போது அந்த அணியை தேர்வு செய்த குழுவின் தலைவராக தான் இருந்தது தனக்கு மகிழ்ச்சியை அதிகரித்தது என்றார்.

சினிமா, எழுத்தாளர்கள், பாடகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்ற சூரிய வணக்கம் விருந்தினர் நிகழ்ச்சியில் கிரிக்கெட் பிரபலம் ஒருவர் பங்கேற்று தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டது கிரிக்கெட் ரசிகர்களுக்கு காலை விருந்தாக அமைந்திருந்தது.

English summary
Former captain and selctors panel chief Srikanth has shared his memories with Indian cricket and the players of past and present in Sun TV's Suriya Vanakkam programme.
கருத்தை எழுதுங்கள்