Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கிரிக்கெட் பார்க்க டிவி முன்பு மக்கள் குவிந்து கிடக்க சச்சினே காரணம்.. டிராவிட்

Posted by:
Published: Friday, November 23, 2012, 11:28 [IST]
 

மும்பை: கிரிக்கெட் விளையாடுவதற்காகவே பிறந்தவர் சச்சின் டெண்டுல்கர். அவர் ஒரு மாபெரும் வீரர். இன்று நமது நாடே கிரிக்கெட் பார்க்க டிவி முன்பு குவிந்து கிடக்க சச்சினே காரணம் என்று புகழாரம் சூட்டியுள்ளார் ராகுல் டிராவிட்.

கிரிக்கெட் பார்க்க டிவி முன்பு மக்கள் குவிந்து கிடக்க சச்சினே காரணம்.. டிராவிட்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் சுவராக பல காலம் திகழ்ந்தவர் ராகுல் டிராவிட். தற்போது இவர் ஓய்வு பெற்று விட்டார். இந்த நிலையில் மும்பையில் நடந்த சச்சின் குறித்த நூல் வெளியீட்டு விழாவில் டிராவிட் கலந்து கொண்டார். Sachin - Born to Bat என்ற அந்த நூலை வெளியிட்டு பேசிய டிராவிட் கூறுகையில்,

நான் முதன் முதலில் சச்சின் கிரிக்கெட் ஆடுவதைப் பார்த்தபோது இவர் கிரிக்கெட் விளையாடவே பிறந்தவர் என்றுதான் எனக்குத் தோன்றியது.

சச்சினின் மிகப் பெரிய சாதனை என்னவென்று தெரியுமா... நமது நாட்டின் சிற்றூர்களிலும், கிராமங்களிலும் கிரிக்கெட்டை கொண்டு சென்று சேர்த்ததுதான். எங்கு பார்த்தாலும் இன்று கிரிக்கெட் விளையாட சச்சினே மூல காரணம், அவரே உத்வேகமாக இருந்நதுள்ளார். இந்திய சமுதாயம் இன்று தொலைக்காட்சி முன்பு கிரிக்கெட் பார்க்க குவிந்து நிற்பதற்கு சச்சினே காரணம்.

சச்சினுடன் இணைந்து விளையாடியதை நான் பெருமையாக கருதுகிறேன். கெளரவமாகவும் கருதுகிறேன்.

நாங்கள் இருவரும் இணைந்து 6900 ரன்கள் எடுத்துள்ளோம். என்னை மக்கள் சீக்கிரம் மறந்து விடலாம். ஆனால் நிச்சயம் சச்சினை மக்கள் மறக்க மாட்டார்கள்.

மிகச் சிறப்பான திறமை படைத்தவர் சச்சின். பெருந்தன்மையான மனம் கொண்டவர் என்று புகழாரம் சூட்டினார் டிராவிட்.

English summary
Former India skipper Rahul Dravid on Thursday, said that the master blaster was born to play cricket, during the launch of the new book Sachin - Born to Bat, in Mumbai. India's 'The Wall' Rahul Dravid, also revealed that the day he saw him bat, he knew that Sachin was born to bat, during the launch of the book penned by Khalid A H Ansari on Thursday.
கருத்தை எழுதுங்கள்