Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

மும்பை டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 178/2 ; இந்தியா 327

Posted by:
Updated: Saturday, November 24, 2012, 17:40 [IST]
 

மும்பை: மும்பையில் நடைபெறும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 178 ரன்களைக் குவித்திருக்கிறது. முன்னதாக முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்களை எடுத்திருந்தது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

மும்பை டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 178/2 ; இந்தியா 327
இரண்டாவது டெஸ்ட் போட்ட்டி மும்பையில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ்சிங் ஆகியோர் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷேவாக், கேப்டன் டோனி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். வழக்கம் போல புஜாரா சதமடித்து அபாரமாக ஆடினார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 266 ரன்களை எடுத்திருந்தது.

முதல் நாள் ஆட்ட முடிவில் புஜாரா 114 ரன்களுடனும் அஸ்வின் 60 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அஸ்வின் விறுவிறுவென ரன்களைக் குவித்த வேகம் எப்படியும் அவர் சதமடித்துவிடுவார் என்றுதான் பார்வையாளர்களை எண்ண வைத்தது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் 68 ரன்கள் எடுத்த நிலையில் பனேசர் பந்தில் அவுட் ஆனார். அதன் பின்னர் ஹர்பஜன்சிங் புஜாராவுடன் கை கோர்த்தார். புஜாரா 135 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஹர்பஜன்சிங்கும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். மொத்தம் 327 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சை நிறைவு செய்தது.

இங்கிலாந்து அணியின் பனேசர் 129 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளையும் சுனன் 70 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தட்டுத் தடுமாறிய நிலையில் புஜரா மற்றும் அஸ்வினின் பொறுப்பான ஆட்டம்தான் இந்தியாவுக்கு கெளரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

இதன் பின்னர் இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்சை ஆடியது. கடந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளைக் கொடுத்ததைப் போல் இல்லாமல் இம்முறை நிதானமான ஆட்டத்தையும் வேகமான ரன்குவிப்பையும் கையாண்டது இங்கிலாந்து. இன்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களைக் குவித்திருக்கிறது. குக் 87 ரன்களுடனும் பீட்டர்சன் 62 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருக்கின்றனர். இதனால் நாளைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கக் கூடும்.

Story first published:  Saturday, November 24, 2012, 11:03 [IST]
English summary
Cheteshwar Pujara cracked his second consecutive Test century as India recovered from a precarious situation to restore the balance in the second cricket Test against England on Friday.
கருத்தை எழுதுங்கள்