Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சச்சினால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு விளையாடினால் போதும்.. பிசிசிஐ 'பலே' பேச்சு!

Posted by:
Published: Monday, November 26, 2012, 14:01 [IST]
 

சச்சினால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு விளையாடினால் போதும்.. பிசிசிஐ 'பலே' பேச்சு!
 

டெல்லி: சச்சின் விளையாடவில்லையே என்று பார்க்காதீர்கள்.அவர் குவித்து வைத்திருக்கும் சாதனைகளைப் பாருங்கள். அவரால் எவ்வளவு காலம் விளையாட முடியுமோ, அவ்வளவு காலமும் விளையாடட்டும். அவருக்கு யாரும் அட்வைஸ் கொடுக்கத் தேவையில்லை என்று பட்பட்டென்று கருத்து தெரிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.

இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியம் சொல்ல வருவதென்னவென்றால் பார்மிலேயே இல்லாவிட்டாலும் கூட சச்சினே நினைத்தால் மட்டுமே அவர் அணியில் இடம் பெற மாட்டார், நாங்களாக அவரை நீக்க மாட்டோம், ரிடையர் ஆகுமாறு சொல்ல மாட்டோம் என்பதே...

சச்சின் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை. இதனால் கடும் அதிருப்தியும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. ஆனால் சச்சினுக்கு வக்காலத்து வாங்கிப் பேசியுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.

இதுகுறித்து வாரியத்தின் மூத்த நிர்வாகியும், ஐபிஎல் தலைவருமான ராஜீவ் சுக்லா கூறுகையில், சச்சினுக்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை. அவரது சாதனைகளை மட்டுமே பார்க்க வேண்டும்.

அவருக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போதுதான் ஓய்வு பெறுவார். அதுவரை அவர் விளையாடுவார். அவர் இப்படி விளையாட வேண்டும், அப்படி விளையாட வேண்டும் என்று யாரும் அட்வைஸ் செய்யத் தேவையில்லை. மேலும் அவர் குறித்து விமர்சிப்பதற்கு முன்பு அவரது சாதனைகளை எண்ணிப் பார்க்க வேண்டும் என்றார் சுக்லா.

சுக்லாவே சொல்லிட்டாருப்பா, பேசாம சும்மா இருங்க...!

Read more about: sachin, சச்சின், cricket
English summary
The Board of Control for Cricket in India (BCCI) has defended out-of-form senior batsman Sachin Tendulkar after India were humiliated by 10 wickets in the second Test by England in Mumbai on Monday. There have already been calls for the Master Blaster to say goodbye to international cricket. However, BCCI's senior official and Indian Premier League (IPL) chairman Rajiv Shukla came out in support of Tendulkar.
கருத்தை எழுதுங்கள்