Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இப்படி சொதப்பிட்டீங்களே, ஸ்பின்னர்களே... டோணி புலம்பல்

Posted by:
Published: Monday, November 26, 2012, 13:20 [IST]
 

இப்படி சொதப்பிட்டீங்களே, ஸ்பின்னர்களே... டோணி புலம்பல்
 

மும்பை: இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சரிவர பந்து வீசவில்லை. இதுவே தோல்விக்கு முக்கியக் காரணம் என்று இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ்.டோணி கூறியுள்ளார்.

இங்கிலாந்துடனான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா பெரும் தோல்வியைத் தழுவியது. இதுகுறித்து கேப்டன் டோணி கூறுகையில், நிச்சயமாக இங்கிலாந்து மிகச் சிறப்பாக மும்பை பிட்ச்சின் சூழலை பயன்படுத்திக் கொண்டு, நம்மை ஒன்றுமில்லாமல் செய்து விட்டது. குறிப்பாக மான்டி பனேசர் மிகச் சிறப்பாக பந்து வீசினார். பேட்ஸ்மேன்களை விளையாட விடாமல் தடுமாறச் செய்து விட்டார்.

நமது ஸ்பின்னர்களின் பந்து வீச்சு என்னை பெரும் ஏமாற்றமடைய வைத்துள்ளது. இங்கிலாந்து சிறப்பாக பெட் செய்ய நாமே வழி விட்டு விட்டதாக கருதுகிறேன். அவர்களை ஏமாற்றும் வித்தையை நாம் வெளிக்காட்டவே இல்லை.

அகமதாபாத் சூழல் வேறு, மும்பை சூழல் வேறு. அதை நமது பந்து வீச்சாளர்கள் சரியாகப் புரிந்து கொண்டு பந்து வீசத் தவறி விட்டனர் என்றார் அவர்.

English summary
His insistence on a spinning track boomeranging, a sheepish Indian captain Mahendra Singh Dhoni on Monday said he was disappointed with his tweakers who did not adjust their pace to exploit the pitch in the lost second Test against England. India were handed a humiliating 10-wicket loss by the English, who were expected to struggle on the spinning track that Dhoni had asked for before the game.
கருத்தை எழுதுங்கள்