Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ரசிகர்களுக்கு 'ஷாக்' தந்த இந்தியா... 10 வி. வித்தியாசத்தில் 2வது டெஸ்ட்டில் படு தோல்வி!

Posted by:
Updated: Monday, November 26, 2012, 18:22 [IST]
 

மும்பை: மும்பையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

ரசிகர்களுக்கு 'ஷாக்' தந்த இந்தியா... 10 வி. வித்தியாசத்தில் 2வது டெஸ்ட்டில் படு தோல்வி!
அகமதாபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றது. 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 327 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி அபாரமாக ஆடியது. 413 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. அந்த அணியின் பீட்டர்சன், குக் ஆகியோர் சதமடித்து கலக்கியிருந்தனர்.

அதன் பின்னர் நேற்று 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 7 விக்கெட் இழப்புக்கு 117 ரன்களைத்தான் எடுத்திருந்தது. இதே சொதப்பல் ஆட்டம் இன்றும் தொடர்ந்தது. 142 ரன்களில் எஞ்சிய விக்கெட்டுகளையும் இழந்து பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது இந்திய அணி. இந்திய அணியின் கவுதம் காம்பீர் 65 ரன்கள் எடுத்திருந்தார். இங்கிலாந்தின் பனேசர் இந்தியாவின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இங்கிலாந்து அணி வெற்றி பெற 57 ரன்கள் தேவை என்ற நிலையில் 2-வது இன்னிங்ஸ் தொடங்கிய நிலையிலேயே இந்த இலக்கை விக்கெட் இழப்பின்றி அந்த அணி எட்டியது. இதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்துவிட்டது. 2 இன்னிங்ஸிலும் இங்கிலாந்தின் பனேசர் மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

இங்கிலாந்து அணி, இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமன் செய்திருக்கிறது.

இந்திய அணிக்கு இந்தப் போட்டி முக்கியமானது. காரணம், இங்கிலாந்துக்குச் சென்றபோது அத்தனை டெஸ்ட் போட்டியிலும் மோசமாக தோற்றதால் இந்திய ரசிகர்கள் கொதிப்புடன் இருந்தனர். எனவே இங்கிலாந்தை இப்போது நடக்கும் நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வீழ்த்த வேண்டும் என்று ஆவலோடும், எதிர்பார்ப்போடும் இருந்தனர். ஆனால் தற்போது 2வது டெஸ்ட் போட்டியை மிக மோசமான முறையில் இந்தியா இழந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Story first published:  Monday, November 26, 2012, 10:47 [IST]
English summary
India were bowled out for 142 in 44.1 overs, setting England a target of just 57 to win the second Test here at Wankhede Stadium on Monday.
கருத்தை எழுதுங்கள்