Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

பேசாம, சச்சின்கிட்ட பேசிப் பாருங்களேன்.. கவாஸ்கர் தரும் யோசனை!

Posted by:
Published: Monday, November 26, 2012, 15:51 [IST]
 

பேசாம, சச்சின்கிட்ட பேசிப் பாருங்களேன்.. கவாஸ்கர் தரும் யோசனை!
 

மும்பை: சச்சின் டெண்டுல்கரின் பார்ம் குறித்தும், அவரது ஓய்வு குறித்தும் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் அவருடன் உட்கார்ந்து பேச வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்பதை கவாஸ்கர் பேசும் பேச்சைப் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது சச்சின் சரியாக ஆடவில்லை, அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்துக்கள் எப்போதெல்லாம் எழுகிறதோ அப்போதெல்லாம் இடையில் புகுந்து தீவிரமாக கருத்து சொல்வது போல பேசுவது கவாஸ்கரின் இயல்பு.

ஆனால் பெரும்பாலும் இவர் சச்சினுக்கு எதிராக பேசவே மாட்டார். அட்வைஸ் சொல்வது போல சொல்லி, சச்சினுக்கு ஆதரவாகவே தனது கருத்தை எப்போதும் முடிப்பார். இப்போதும் அப்படி ஒரு கருத்தை சொல்லியுள்ளார். அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா....

சச்சின் நீண்டகாலமாக ஆடி வருகிறார். தொடர்ந்து நிலையாகவும் ஆடுகிறார். சமீப காலமாக, குறுகிய காலமாக அவரால் அரை சதங்களை எடுக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதான் அவர் குறித்த கேள்விகளை விமர்சகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் அவரால் 29 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்துள்ளது. எனவே சச்சின் யோசிக்கும் நேரம் வந்து விட்டது. ஓய்வு பெற வேண்டுமா என்பது குறித்து அவர் யோசிக்க வேண்டும்.

அதேபோல சச்சினுடன் தேர்வாளர்கள் உட்கார்ந்து பேச வேண்டும். அவருக்கு ஆலோசனைகளை அளிக்க வேண்டும். அவர்கள்தான் இதற்குப் பொருத்தமானவர்கள்.

அதேசமயம், சச்சினின் ஓய்வு குறித்த எந்த முடிவாக இருந்தாலும் அதை அவரே எடுப்பார் என்றுதான் நான் நம்புகிறேன். அதுதான் சரியானதாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.

இதில் மேலே உள்ள பாராக்கள் எல்லாம் ஊசி என்றால் கடைசி பாராதான் வாழைப்பழம்... !

எப்பூடி....?

English summary
Former India skipper Sunil Gavaskar hinted at Sachin Tendulkar's retirement, as he insisted the selectors to talk to the batting maestro and discuss future plans. "Tendulkar has been playing for so long and he has been so consistent. This little period of lack of runs or lack of half centuries will give the critics chance to ask questions," Gavaskar said.
கருத்தை எழுதுங்கள்