Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சின்னப் புள்ளையா இருந்தப்ப நான் பிபிசி கமென்டரி கேட்பேன்.. டிராவிட்

Posted by:
Published: Monday, November 26, 2012, 12:19 [IST]
 

சின்னப் புள்ளையா இருந்தப்ப நான் பிபிசி கமென்டரி கேட்பேன்.. டிராவிட்
 

மும்பை: நான் சிறு வயதாக இருந்தபோது பிபிசி ரேடியோவில் கிரிக்கெட் கமென்ட்ரி கேட்டு எனது கிரிக்கெட் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன், அதில் நிபுணரானேன் என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட்.

தற்போது பிபிசியின் வர்னணையாளர் குழுவில் டிராவிடும் இணைந்துள்ளார். இந்தியா, இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் குறித்த வர்னணையில் டிராவிட் ஈடுபட்டுள்ளார். டிராவிடுடன் இணைந்து வர்னணை செய்வது பெருமை தருவதாக நிகழ்ச்சித் தயாரிப்பாளரும், வர்னணையாளருமான ஆடம் மெளன்ட்போர்ட் கூறியுள்ளார். அதேசமயம், தான் சிறு வயதிலிருந்தே பிபிசியில் கிரிக்கெட் கமென்ட்ரி கேட்டு வளர்ந்ததாகவும், கிரிக்கெட் குறித்த அறிவை வளர்த்துக் கொண்டதாகவும் டிராவிட் கூறியதைக்கேட்டு ஆச்சரியமடைந்ததாக மெளன்ட்போர்ட் கூறியுள்ளார்.

இதுகுறித்து மெளன்ட்போர்ட் கூறுகையில், சிறு வயதில் பிபிசி ரேடியோவில் ஒலிபரப்பாகும் கிரிக்கெட் வர்னணையை கேட்பாராம் டிராவிட். அவரது தந்தைதான் பிபிசியில் வர்னணை கேள் சரியாக இருக்கும் என்று கூறுவாராம். இந்த வர்னணையைக் கேட்டுத்தான் அவர் தனது கிரிக்கெட் ஆர்வத்தையும், அறிவையும் வளர்த்துக் கொண்டதாக டிராவிட் கூறியபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

இப்போது அவர் கிரிக்கெட் போட்டி குறித்த ஆய்வை எங்களுடன் வழங்கி வருகிறார். ஆனால் எங்களது ரேடியோவுடனான அவரது தொடர்பு மிக நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கி விட்டது வியப்பாகவும், பெருமையாகவும் உள்ளது என்றார் மெளன்ட்போர்ட்.

English summary
India's Rahul Dravid, who is a part of BBC's commentary team and an expert n BBC's Test match special has impressed the commentary team as the show producer Adam Mountford, has leaped praise on the star cricketer.
கருத்தை எழுதுங்கள்