Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

முதல்ல உங்க வேலையை ஒழுங்கா செய்யுங்க டோணி.. பாயும் கியூரேட்டர்

Posted by:
Published: Tuesday, November 27, 2012, 15:18 [IST]
 

முதல்ல உங்க வேலையை ஒழுங்கா செய்யுங்க டோணி.. பாயும் கியூரேட்டர்
 

மும்பை: பிட்ச் குறித்து பேசிக் கொண்டிருப்பதற்குப் பதில் டோணி தலைமையிலான இந்திய அணியினர் முதலில் தங்களது ஹோம் ஒர்க்கை சரியாக செய்ய முயல வேண்டும். பிறகு பிட்ச் குறித்து அவர்கள் குறை கூறட்டும் என்று மும்பை வாங்கடே பிட்ச் கியூரேட்டர் சுதிர் நாயக் காட்டமாகக் கூறியுள்ளார்.

மும்பை போட்டியில் மகா மோசமான முறையில் தோல்வி அடைந்துள்ளது இந்திய அணி. இந்தத் தோல்விக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர்களே காரணம் என்று பழியைப் போட்டுள்ளார் கேப்டன் டோணி. ஆனால் பிட்ச்சை சரியாகப் பயன்படுத்தவில்லை இந்திய அணி என்பது மும்பை வாங்கடே மைதான பிட்ச் பராமரிப்பாளர் சுதிர் நாயக்கின் குற்றச்சாட்டாகும்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இங்கிலாந்து அணி அனைத்து வகையிலும் நம்மை தோற்கடித்து விட்டது. வாங்கடே பிட்ச் முதல் நாளிலிருந்தே சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமானதாகவே இருந்தது. அதை நாம் தான் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் இங்கிலாந்து ஸ்பின்னர்கள் இதை சரியாக பயன்படுத்தினர்.

பந்து மேலும் சுழன்று வர வேண்டும், அப்படிப்பட்ட பிட்ச்தான் தேவை என்று டோணி சொல்வது புரியவில்லை. முதலில் நமது வீரர்கள் நன்றாக ஹோம் ஒர்க் செய்ய வேண்டும். பிறகுதான் பிட்ச் குறித்து அவர்கள் பேச வேண்டும். மும்பை பிட்ச்சில், விக்கெட்டை வீழ்த்த வேண்டுமானால், பந்து வேகமாக பந்து வீச்சாளரிடமிருந்து வெளியேற வேண்டும். அப்போதுதான் சுழற்சி நன்றாக இருக்கும், விக்கெட்களையும் வீழ்த்த முடியும். இதை நாம் சரியாகச் செய்யவில்லை. மாறாக இங்கிலாந்து வீரர் மான்டி பனேசர் மிக அற்புதமாக செய்து காட்டினார்.

மும்பையைப் பொறுத்தவரை அது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் சாதகமான மைதானம். கடைசியாக இங்கு அவர்கள் 2006ம் ஆண்டு வெற்றி பெற்றனர். ஆனால் இப்போது போல அப்போது பிட்ச் இல்லை. அந்தப் போட்டியில் 4வது நாளிலிருந்துதான் சுழற்சியே கிடைக்க ஆரம்பித்தது. ஆனால் அவர்கள் சரியான முறையில் ஆடி வென்றனர்.

இந்தியாவுக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. எல்லா வகையான தப்பையும் இந்தப் போட்டியில் அவர்கள் செய்தனர். பூஜாராவைத் தவிர யாருமே நன்றாக ரன் எடுக்கவில்லை. ஸ்பின்னர்களின் பந்து வீச்சும் மோசமாக இருந்தது. வேகமாக அவர்கள் பந்து வீசவே முயலவில்லை.

கொல்கத்தாவிலும் சுழலக் கூடிய பிட்ச் தேவை என்று டோணி கேட்டுள்ளார். நிச்சயம் கொல்கத்தா பிட்ச் சுழற்பந்துக்கு சாதகமானதாகவே இருக்கும். இங்குள்ளதைப் போல இல்லாமல் அங்கு அதிக அளவிலான பவுன்ஸ் இருக்காது. எனவே பந்து வீச்சாளர்கள் மெதுவாகவே பந்தை ரிலீஸ் செய்யலாம்.

சுழலும் வகையான பிட்ச் தேவை என்று கேட்பதில் தவறில்லை. ஆனால் முதலில் நாம் நல்லபடியாக தயாராக இருப்பதும் கூட அவசியமாயிற்றே.. என்றார் நாயக்.

'பிட்ச்'சைப் பற்றிக் கவலைப்படாம இங்கிலாந்தை எப்படி பிச்சு உதறுவதென்று கவலைப்பட்டு திட்டமிட்டு சரியான முறையில் 'டீல்' பண்ணுங்கப்பா...!

English summary
Wankhede curator and former India cricketer Sudhir Naik, on Tuesday said that Team India should have bowled quicker through the air, which would have helped them get wickets, like England spinners and insisted Dhoni's team to do their homework before doctoring pitches.
கருத்தை எழுதுங்கள்