Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

''ஷுக்ரியா மும்பை''... ரசிகர்களுக்கு இந்தியில் தேங்ஸ் சொன்ன கெவின் பீட்டர்சன்!

Posted by:
Updated: Thursday, March 21, 2013, 18:27 [IST]
 

''ஷுக்ரியா மும்பை''... ரசிகர்களுக்கு இந்தியில் தேங்ஸ் சொன்ன கெவின் பீட்டர்சன்!
 

மும்பை: மும்பை ரசிகர்களுக்கு இந்தியில் நன்றி தெரிவித்து அசத்தியுள்ளார் இங்கிலாந்து ஸ்டார் பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன்.

மும்பையில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற கெவின் பீட்டர்சனின் அதிரடி அபார ஆட்டமே முக்கியக் காரணம். அவர் போட்ட 186 ரன்கள்தான் இங்கிலாந்துக்கு 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடிக் கொடுத்தது.

இந்த நிலையில் மும்பை ரசிகர்களுக்கு டிவிட்டர் மூலம் நன்றி சொல்லியுள்ளார் கேபி என்று செல்லமாக அழைக்கப்படும் பீட்டர்சன். அதையும் இந்தியில் சொல்லி மேலும் கலக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இந்தி டிவிட்டரில், Dono teams ko support dene ke liye shukriya! Main chahta hoon kolkata aur nagpur mein agle do tests ke liye bhi aisa hi ho! என்று கூறியுள்ளார் பீட்டர்சன். அனேகமாக, இந்தியாவை தனது சுழற்பந்து வீச்சால் சுருண்டு போக வைத்த மான்ட பனேசர்தான் பீட்டர்சனுக்கு இந்த இந்தி வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்திருப்பார் என்று 'சந்தேகிக்கப்படுகிறது'. பனேசரின் பூர்வீகம் பஞ்சாப் என்பது நினைவிருக்கலாம்.

பஹூத் அச்சா பீட்டர் பய்யா... அடுத்த போட்டியில் நாங்க உங்களை 'பாயா' போடுவோம்ல, அப்ப யுவராஜை விட்டு பதில் டிவிட் போட்டு விடுறோம்..!

Story first published:  Tuesday, November 27, 2012, 11:46 [IST]
English summary
Kevin Pietersen, whose heroic knock of 186 played a huge part in England's thumping 10-wicket victory against India in the second cricket Test, has a few good words to say about the Mumbai crowd. Pietersen posted a message in hindi on his Twitter page to thank the crowd who gave him a standing ovation when he returned to the pavilion after his brilliant effort.
கருத்தை எழுதுங்கள்