Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சச்சினும் பேச மாட்டேங்கிறாரு, தேர்வாளர்களும் பேச மறுக்கிறார்கள்... கபில் தேவ் வருத்தம்

Posted by:
Updated: Tuesday, November 27, 2012, 15:20 [IST]
 

சச்சினும் பேச மாட்டேங்கிறாரு, தேர்வாளர்களும் பேச மறுக்கிறார்கள்... கபில் தேவ் வருத்தம்
 

டெல்லி: சச்சின் எதையும் வெளிப்படையாகப் பேசுவதில்லை. குறிப்பாக தனது பார்ம் குறித்தும், எதிர்காலம் குறித்தும் அவர் பேசுவதே இல்லை. அதேபோல தேர்வாளர்களும் எதுவும் பேசாமல் வாயை மூடிக் கொண்டுள்ளனர். இதுதான் பிரச்சினை என்று கூறியுள்ளார், இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்த 'ஹரியானா சிங்கம்' கபில்தேவ்.

சச்சின் குறித்து முன்னாள் வீரர்கள் பேச ஆரம்பித்துள்ளனர். அவருடன் தேர்வாளர்கள் பேசி பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என்று கவாஸ்கர் கூறியிருந்தார். இந்த நிலையில் கபிலும் அதே பாணியில் பேசியுள்ளார்.

இதுகுறித்து கபில் கூறுகையில், ஒன்று தேர்வாளர்கள் சச்சினுடன் பேச வேண்டும். இல்லாவிட்டால் சச்சினே தேர்வாளர்களுடன் விவாதிக்க வேண்டும். பிரச்சினை என்னவென்றால் இதுகுறித்து வெளிப்படையாக பேச மாட்டேன் என்கிறார் சச்சின். அதேபோல தேர்வாளர்களும் எதுவும் பேசாமல் வாய் மூடி மவுனம் காக்கின்றனர்.

இதன் விளைவு பெரும் குழப்பமே மிஞ்சுகிறது. ரசிகர்கள்தான் பாவம், எதிர்பார்த்து ஏமாந்து போகிறார்கள். மேலும் எல்லோரும் விமர்சிக்கவும் செய்கிறார்கள். குறிப்பாக சச்சின் எப்போதெல்லாம் மோசமாக ஆடுகிறாரோ அப்போதெல்லாம் விமர்சனங்கள் எழுகின்றன.

அவரிடம் தேர்வாளர்கள் வெளிப்படையாக பேச வேண்டும். சச்சின் ஒரு ஹீரோ. அவரை நோக்கி கை விரல்களை பலரும் சுட்டும்போது உண்மையாகவே வேதனையாக இருக்கிறது.

மும்பை தோல்வி மிகவும் பெரியது. காரணம், நமது சொந்த மண்ணில், நமக்குச் சாதகமான சூழலில் நாம் ஒருபோதும் எதிராளியின் கை ஓங்க அனுமதிக்கவே கூடாது. ஆனால் மும்பையில் அனுமதித்து விட்டோம். டோணி கடந்த 10 டெஸ்ட் போட்டிகளாகவே சரியாக ஆடவில்லை. அவரது இடமே அணியில் கேள்விக்குறியதாக மாறியுள்ளதாகவே நான் கருதுகிறேன்.

ஒரு அணி வெல்லும்போது கேப்டனுக்கே அத்தனை பெருமைகளும் போகிறது. அதேசமயம், தோல்வியுறும்போதும் கேப்டனே அதற்கான பழியையும் ஏற்க வேண்டும். டோணி தன்னையும் கைவிட்டு விட்டார், தன்னை நம்பியிருந்த ரசிகர்களையும் கைவிட்டு விட்டார் என்றார் கபில் தேவ்.

Story first published:  Tuesday, November 27, 2012, 15:15 [IST]
English summary
Saddened by the criticism that Sachin Tendulkar is facing due to his lean run, former Indian cricket captain Kapil Dev said the veteran batsman should speak to the selectors about his future. Tendulkar's poor run continued in the recently-concluded second Test against England which the visitors won in just four days despite the track being tailormade to India's demands.
கருத்தை எழுதுங்கள்