Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சச்சினுக்கு ரிக்கி பரவாயில்லை போலிருக்கே...!

Posted by:
Published: Wednesday, November 28, 2012, 12:17 [IST]
 

மும்பை: இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கரும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் மெகா ஸ்டார் ரிக்கி பான்டிங்கும் கிட்டத்தட்ட ஒரே கப்பலில்தான் பயணம் செய்து வருகின்றனர்... ஆனால் இருவரின் சமீப கால ஆட்டத்தைப் பார்க்கும்போது ரிக்கியை விட சச்சின் சற்று பின்தங்கித்தான் உள்ளார் என்பதை அறியலாம்.

சச்சினுக்கு 192.. ரிக்கிக்கு 167

சச்சின் டெண்டுல்கர் இதுவரை 192 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். ரிக்கி பான்ட்டிங் 167 போட்டிகளில் ஆடியுள்ளார்.

ரன் குவிப்பில் சச்சின்தான் லீடர்

ரன் குவிப்பு என்று பார்த்தோம் என்றால் சச்சின் தான் டாப்பில் உள்ளார். உலக சாதனையுடன் அவர் குவித்துள்ள ரன்கள் மொத்தம் 15,562. ரிக்கி பான்டிங் இதுவரை 13,366 ரன்கள் எடுத்துள்ளார்.

அதிகபட்ச ஸ்கோரில் ரிக்கிதான் டாப்

ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் ரிக்கி பான்டிங்தான் முதலிடத்தில் உள்ளார். அவர் குவித்த ரன்கள் 257. சச்சின் கணக்கு ஆட்டமிழக்காமல் 248 ரன்கள்.

சராசரியில் சச்சின்தான் சூப்பர்

ஒட்டுமொத்த டெஸ்ட் பேட்டிங் சராசரியில் சச்சின் 54.60 வைத்துள்ளார். ரிக்கியின் சராசரி 52.21 ஆகும்.

சதத்திலும் சச்சினே முன்னோடி

சதம் போடுவதிலும் சச்சின்தான் டாப். அவர் எடுத்துள்ள சதங்களின் எண்ணிக்கை 51 ஆகும். இது உலக சாதனையாகும். ரிக்கி பான்டிங் 41 சதம் போட்டுள்ளார்.

ஆப் அடிப்பதிலும் சச்சினே முன்னணி

அதேபோல அரை சதம் போடுவதிலும் சச்சின்தான் முன்னணியில் உள்ளார். அவர் எடுத்துள்ள அரை சதங்களின் எண்ணிக்கை 65 ஆகும். ரிக்கி பான்டிங் 62 அரை சதம் போட்டுள்ளார்.

2011க்குப் பிறகு சச்சின் டவுன்

இதெல்லாம் ஒட்டுமொத்த சாதனைகளின் பட்டியல். ஆனால் 2011 ஏப்ரலுக்குப் பிறகு சச்சினை ஓரம் கட்டியுள்ளார் ரிக்கி பான்டிங். அதுகுறித்த ஒரு பார்வை...

ஆளுக்கு 15!

2011 ஏப்ரலுக்குப் பிறகு இரு வீரர்களும் தலா 15 போட்டிகளில் ஆடியுள்ளனர். ஆனால் இருவரிலும் ரிக்கி பான்டிங்கின் ஆட்டம் சற்றே சிறப்பாக உள்ளது.

ரன் குவிப்பில் ரிக்கியே முன்னணி

15 டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்தவராக ரிக்கி பான்டிங் இருக்கிறார். அவர் மொத்தம் 1003 ரன்கள் எடுத்துள்ளார். சச்சின் எடுத்த ரன்கள் 870 மட்டுமே.

அதிகபட்ச ரன்களும் ரிக்கியே

ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ரன்கள் எடுத்த வீரராகவும் ரிக்கி பான்டிங்கே இருக்கிறார். அவர் 221 ரன்களை எடுத்துள்ளார். சச்சின் எடுத்த அதிகபட்ச ரன் 94 மட்டுமே.

சராசரியிலும் ரிக்கியே பெஸ்ட்

சராசரி என்று பார்த்தாலும் ரிக்கியே சிறப்பாக இருக்கிறார். அவரது சராசரி 40.12 ஆகும். சச்சின் சராசரி 32.22 மட்டுமே.

ரிக்கிக்கு 2 சதம்... சச்சினுக்கு பூஜ்யம்

ரிக்கி பான்டிங் இந்த 15 டெஸ்ட் போட்டிகளில் 2 சதம் போட்டுள்ளார். ஆனால் சச்சின் ஒரு சதமும் போடவில்லை.

ஆளுக்கு 6 அரை சதம்

அரை சதம் போடுவதில் மட்டும் இரு வீரர்களும் சமமாக உள்ளனர். அதாவது தலா 6 அரை சதம் போட்டுள்ளனர்.

இருவருக்கும் நெருக்கடி

ரிக்கி பான்டிங்கும் சரி, சச்சினும் சரி தத்தமது நாடுகளில் கடும் நெருக்கடியில்தான் இருக்கின்றனர். இருவரும் சிறப்பாக மட்டுமே ஆட வேண்டும் என்பதே இரு நாட்டு ரசிகர்களின் ஆவலும். எனவே அந்த நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் இருவரும் ஆடி வருகின்றனர்.

முதல்ல ஓய்வு பெறப் போவது யாரோ...!

சச்சினுக்கு தற்போது 39 வயதாகிறது. ரிக்கி பான்டிங்குக்கு 37 வயதாகிறது. இருவரும் ஓய்வை நோக்கிய பாதையில்தான் தற்போது சேர்ந்து பயணித்து வருகின்றனர். இருப்பினும் இவர்களில் யார் முதலில் ஓய்வு பெறப் போவது என்பதுதான் அனைவரின் எதிர்ப்பார்ப்பாகவும் உள்ளது.

'ஒஸ்தி'யாக முடித்தால் நல்லதுதான்

இரு வீரர்களும் சாமானியர்கள் அல்ல. கிரிக்கெட் உலகம் கண்ட அருமையான வீரர்கள். அட்டகாசமான சாதனையாளர்கள். அதை யாருமே மறுக்க முடியாது, மறக்கக் கூடாது. இருப்பினும் இருவரது கிரிக்கெட் வாழ்க்கையும் அழகாக, அமர்க்களமாக முடிய வேண்டும் என்பதே அனைவரின் ஆசையும்.

ரசிகர்களின் இந்த குறைந்தபட்ச ஆசையை நிறைவேற்றுவார்களா சச்சினும், ரிக்கியும்...?

 

English summary
Both are legends. Both have played more than 150 tests. Both are kind of players. One is 39 years old and another is 37. But Sachin and Ponting can overcome from their slump and end on a high note?. This is the biggest question among the fans.
கருத்தை எழுதுங்கள்