Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

'ஆல்டர்நேட்டிவ்' யாருமே இல்லையேப்பா... வெங்சர்க்கர் புலம்பல்

Posted by:
Published: Thursday, November 29, 2012, 15:31 [IST]
 

'ஆல்டர்நேட்டிவ்' யாருமே இல்லையேப்பா... வெங்சர்க்கர் புலம்பல்
 

மும்பை: இந்திய அணியில் மூத்த வீரர்களுக்கு சரியான மாற்று இல்லை. இதனால் அணியின் நிலை கவலைக்கிடமாகவும், மோசமாகவும் உள்ளது என்று முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்க்கர் கூறியுள்ளார்.

வெங்சர்க்கர் முன்னாள் தேர்வுக் குழுத் தலைவர் ஆவார். இந்திய அணியின் நிலை குறித்து அவர் கருத்து கூறுகையில்,

இந்திய கிரிக்கெட் தற்போது மோசமான நிலையில் இருக்கிறது. மோசமாக விளையாடும் வீரர்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை தேர்வு செய்ய முடியவில்லை. ஏனென்றால் சரியான மாற்று வீரர்கள் இல்லை. சிறப்பாக ஆடக்கூடிய வீரர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. இதனால் தான் மோசமாக விளையாடும் வீரர்கள் தொடர்ந்து நீடிக்கிறார்கள்.

தேர்வு குழுவினரும் வேறு வழியில்லாமல் அவர்களை தொடர்ந்து ஆட விடுகின்றனர். கிரிக்கெட் நிர்வாகிகள் சிறந்த வீரர்களை உருவாக்க எந்தவித முயற்சியும் செய்யவில்லை. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை சரியான முறையில் தயார்படுத்தவில்லை.

இந்திய அணியின் பயிற்சியாளரான டங்கன் பிளட்சர் அணியில் எதற்காக இருக்கிறார் என்றே தெரியவில்லை. கொல்கத்தா டெஸ்டில் எந்த வீரராவது மோசமாக ஆடும் பட்சத்தில் அஜிங்கியா ரஹானேவுக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கலாம். இவர் டெஸ்டில் விளையாட தயாராக உள்ளார் என்றார் வெங்சர்க்கர்.

வெங்ஸ் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் வெங்சர்க்கர் ஒரு அருமையான ஆட்டக்காரர். இந்திய அணி, 1979, 82 மற்றும் 86 ஆகிய ஆண்டுகளில் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் சென்றபோது லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டிகளில் அடுத்தடுத்து செஞ்சுரி போட்டு கலக்கியவர் வெங்சர்க்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Forrmer Indian captain Vengsarkar said, Indian team has no alternative for senior players. If anyone goes wrong, no next best batsman is available, he added.
கருத்தை எழுதுங்கள்