Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

நேற்றுதான் நியூஸ் போட்டோம்...இன்று டெஸ்ட் ஓய்வை அறிவித்தார் ரிக்கி பான்டிங்!

Posted by:
Published: Thursday, November 29, 2012, 11:12 [IST]
 

பெர்த்: நேற்றுதான் முதலில் ஓய்வு பெறப் போவது சச்சின் டெண்டுல்கரா இல்லை ரிக்கி பான்டிங்கா என்று செய்தி போட்டோம். இதோ... ரிக்கி முந்திக் கொண்டு விட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார், ஆஸ்திரேலியா கண்ட அருமையான கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ரிக்கி பான்டிங்.

ஆஸ்திரேலிய அணியின் அட்டகாசமான கேப்டன்களில் ஒருவராக கலக்கியவர் ரிக்கி பான்டிங். அவர் குறித்து பல சர்ச்சைகள் இருந்தாலும் அவர் ஒரு அருமையான வீரர் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்க முடியாது. ஒரு கேப்டனாக, ஒரு சிறந்த வீரராக களத்தில் கலக்கிய சமீப காலத்து வீரர்களில் முக்கியமானவர் ரிக்கி என்பதில் சந்தேகமே இல்லை.

நேற்றுதான் நியூஸ் போட்டோம்...இன்று டெஸ்ட் ஓய்வை அறிவித்தார் ரிக்கி பான்டிங்!
இதோ.. ரிக்கி பான்டிங் டெஸ்ட் கிரிக்கெட்டிலிரு்நது ஓய்வு பெற்று விட்டார். ஏற்கனவே அவர் ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்று விட்டது நினைவிருக்கலாம். இதன் மூலம் ரிக்கியின் கிரிக்கெட் சகாப்தம் முடிவுக்கு வருகிறது.

இந்த வாரத்தில் பெர்த் நகரில் தொடங்கவுள்ள தென் ஆப்பிரிக்க அணியுடனான டெஸ்ட் போட்டியே தனது கடைசிப் போட்டி என்று ரிக்கி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அவசரமாக கூட்டிய செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், சில மணி நேரங்களுக்கு முன்புதான் எனது முடிவை எடுத்தேன்.வரவிருக்கிற தென் ஆப்பிரிக்காவுடனான பெர்த் டெஸ்ட் போட்டியே எனது கடைசி டெஸ்ட் போட்டியாகும் என்றார்.

அடுத்த மாதம் ரிக்கிக்கு 38 வயதாகிறது. கடந்த பிரிஸ்பேன் மற்றும் அடிலெய்ட் டெஸ்ட் போட்டிகளில் ரிக்கி சரிவர ஆடவில்லை. இதனால் அவரது ஓய்வு குறித்து வேகமான பேச்சுக்கள் எழுந்தன. இந்த நிலையில் தனது டெஸ்ட் ஓய்வை அறிவித்து விட்டார் ரிக்கி.

167 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார் ரிக்கி பான்டிங். இந்தியாவின் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் ரிக்கிதான். அவர் மொத்தம் 13,366 ரன்களைக் குவித்து வைத்துள்ளார் ரிக்கி என்பது நினைவிருக்கலாம்.

டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 257 ரன்கள் எடுத்துள்ளார் ரிக்கி பான்டிங். இவரது டெஸ்ட் சராசரி 52.21 ஆகும். 41 சதங்களையும் 62 அரை சதங்களையும் போட்டுள்ளார் ரிக்கி பான்டிங்.

English summary
Former Australian captain Ricky Ponting on Thursday announced his retirement from Test cricket with this week's Perth Test against South Africa to be his last. Ponting is Australia's top Test run-scorer, behind only India's Sachin Tendulkar on the all-time Test list, with 13,366 runs.
கருத்தை எழுதுங்கள்