Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஸ்ரீநாத்திடம் வாலாட்டிய ரிக்கி பான்டிங்.. ஒரு 'பிளாஷ்பேக்'!

Posted by:
Published: Thursday, November 29, 2012, 15:17 [IST]
 

ஸ்ரீநாத்திடம் வாலாட்டிய ரிக்கி பான்டிங்..  ஒரு 'பிளாஷ்பேக்'!
 

பெங்களூர்: வல்லவர் என்று ரிக்கி பான்டிங்கை நாலு தடவை சொன்னால் அவர் வாலாட்டிய வேலைகளை 40 முறை சொல்லலாம். அந்த அளவுக்கு குசும்பு பிடிச்ச ஆசாமியும் கூட நம்ம ரிக்கி.

அவரது சேஷ்டைகள் குறித்து நிறையப் பேசலாம்.. ஒரே ஒரு சாம்பிள் பார்ப்போம்...

1999-2000மாவது ஆண்டு ஆஸ்திரேலியாவில் 'கேப்டன்' சச்சின் டெண்டுல்கர் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடி மூன்றையும் பரிதாபமாக இழந்தது.

அப்போது ரிக்கி பான்டிங் ஆஸ்திரேலிய அணியில் முக்கிய வீரராக இருந்தார். இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் எப்போதுமே ஆவேசமாக ஆடுவார் ரிக்கி. அப்போதைய டெஸ்ட் தொடரிலும் அவர் தீவிரமான ஆட்டத்தைக் காட்டினார்.

இந்திய அணியில் அப்போது அதி வேக வேகப்பந்துவீச்சாளராக கலக்கிக் கொண்டிருந்தவர் ஜவஹல் ஸ்ரீநாத். ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியில், ஸ்ரீநாத் பந்து வீசியபோது அது பவுன்சராக மாறி ரிக்கி பான்டிங்கைப் பதம் பார்த்து விட்டது.

ஸ்ரீநாத் பந்து வீசியபோது, பந்தின் வேகத்தையும், அது வரும் போக்கையும் சரியாக கவனிக்காமல் முன்னால் வந்து ஆட காலெடுத்து வைத்தார் ரிக்கி. வந்த பந்தை வாங்கி அடிக்க அவர் முயன்றார். ஆனால் பந்து தவறிப் போய், அவரது ஹெல்மட்டில் மோதி விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரிக்கி பான்டிங், ஸ்ரீநாத்தைப் பார்த்து திட்ட ஆரம்பித்து விட்டார்.

பந்து வீசிய ஸ்ரீநாத்தோ, ரிக்கி மீது பந்து பட்டு காயமாகி விட்டதோ என்ற பயத்துடனும், அக்கறையுடனும் அவரை நோக்கி வந்து கவலை தெரிவித்தார். ஸாரி என்றும் கூறினார். இத்தனைக்கும் அது ஸ்ரீநாத்தின் தவறல்ல. ஆனாலும் ஒரு ஜென்டில்மேனாக நடந்து கொண்டார் ஸ்ரீநாத். ஆனால் ரிக்கி தன்னை திட்டுவதை அறிந்து ஸ்ரீநாத் கடுப்பாகிப் போனார்.

இந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஸ்ரீநாத்தின் செயலைப் பாராட்டிய பலரும், ரிக்கியை விமர்சித்துப் பேசினர்.

ரிக்கியின் சேஷ்டைகளுக்கு இதுபோல நிறைய உதாரணத்தைக் காட்டலாம்.

English summary
Ricky Ponting, who announced his retirement on Thursday, has had many battles against India. While he has won and lost among those, it is worth recalling one of the incidents involving India paceman Javagal Srinath and the Australian.
கருத்தை எழுதுங்கள்