Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டோணி மோதல்: கொல்கத்தா ஈடன் மைதான பராமரிப்பாளர் லீவில் போவதாக அறிவித்ததால் பரபரப்பு!

Posted by:
Published: Sunday, December 2, 2012, 11:40 [IST]
 

டோணி மோதல்: கொல்கத்தா ஈடன் மைதான பராமரிப்பாளர் லீவில் போவதாக அறிவித்ததால் பரபரப்பு!
 

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியுடனான மோதலிலால் கடும் அதிருப்தி அடைந்த கொல்கத்தா ஈடன் மைதான ஆடுகள பராமரிப்பாளர் பிரபிர் முகர்ஜி, மருத்துவ விடுப்பில் செல்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அவருடன் பெங்கால் கிரிக்கெட் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மீண்டும் ஆடுகளத்துக்கு திரும்பினார்.

பிரச்சனை என்ன?

இங்கிலாந்து அணியுடனான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை வென்ற இந்திய அணி, மும்பையில் தோல்வியைத் தழுவியது. அகமதாபாத் மைதானத்தை மிகக் கடுமையாக விமர்சித்த கேப்டன் டோணி, மும்பை மைதானம் போல் சுழலுக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும் என்று கூறிவந்தார். மும்பை மைதானம் போல அடுத்த போட்டி நடைபெறும் கொல்கத்தா ஈடன் மைதானும் இருக்க வேண்டும் என்று கூறினார் டோணி.

கொல்கத்தாவின் ஈடன் மைதானத்தில் வரும் 5-ந் தேதி 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. இதனால் டோணியின் கருத்தை ஆமோதித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ஈடன் மைதான ஆடுகள பராமரிப்பாளரிடம், சுழலுக்கு சாதகமாக ஆடுகளத்தை அமைக்க வலியுறுத்தியது.

ஆனால் ஈடன் மைதான ஆடுகள பராமரிப்பாளர் முகர்ஜியோ, அப்படியெல்லாம் செய்ய முடியாது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சமமான ஒத்துழைப்பு தரும் வகையில்தான் பிட்ச் போடப்படும் என்று கூறியிருக்கிறார். இதை நிராகரித்த கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், திரிபுரா கிரிக்கெட் சங்க ஆடுகள பராமரிப்பாளர் பவ்மிக்கை கொல்கத்தா சென்று முகர்ஜியுடன் இணைந்து செயல்பட உத்தரவிட்டது.

இதில் செம கடுபபகிப் போனார் முகர்ஜி. 1985-ம் ஆண்டில் இருந்து கொல்கத்தா மைதானத்தின் ஆடுகள பராமரிப்பாளராக இருந்து வரும் தம்மை அவமதிக்கும் வகையில் கிரிக்கெட் வாரியம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது என்பது முகர்ஜியின் ஆதங்கம்.

லீவில் போக முடிவு

இந்நிலையில் போட்டி தொடங்க சில நாட்களே இருக்கும்போது, திடீரென மருத்துவ விடுப்பில் போகிறேன் என்று முகர்ஜி அறிவித்திருக்கிறார். "ஒரு பிட்ச் எப்படி இருக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேசுவது என்பது தவறான முன்னுதாரணம்.. அதை டோணி செய்து வருகிறார். பெங்கால் கிரிக்கெட் சங்கமும் கூட எனக்கு ஆதரவாக இல்லை. டோணி சொல்வது போல் ஆடுகளத்தை மாற்றி அமைக்காவிட்டால் சஸ்பென்ட் செய்வேன் என்று ஜக்மோகன் டால்மியா மிரட்டுகிறார். இது எனக்கு மன உளைச்சலை தந்திருக்கிறது. இனி திரும்பி வருவேனானா எனத் தெரியவில்லை என்று குமுறிக் கொட்டினார்.

இருப்பினும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்திய பெங்கால் கிரிக்கெட் சங்கம், முகர்ஜி தொடர்ந்து ஆடுகள பராமரிப்பாளராக நீடிப்பார் என்று கூறியிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஒரு நாள் நாடகம் முடிவுக்கு வந்து முகர்ஜி ஆடுகளத்துக்கு திரும்பியதால் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறது.

English summary
The drama surrounding the preparations of the Eden pitch for the third Test between India and England ended today after CAB President Jagmohan Dalmiya persuaded Prabir Mukherjee to return to work, hours after the peeved curator had threatened to proceed on medical leave.
கருத்தை எழுதுங்கள்