Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இந்தியா- ஆஸி. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நடத்தும் வாய்ப்பை பறிகொடுக்கிறது கான்பூர்?

Posted by:
Published: Sunday, December 2, 2012, 14:16 [IST]
 

இந்தியா- ஆஸி. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நடத்தும் வாய்ப்பை பறிகொடுக்கிறது கான்பூர்?
 

கான்பூர்: அடுத்த ஆண்டு இந்தியா வருகை தரும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியை நடத்தும் வாய்ப்பை கான்பூர் பறிகொடுக்க இருக்கிறது.

அடுத்த ஆண்டு மார்ச் 14-ந் தேதி முதல் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்கிறது. இரு நாடுகளிடையேயான 3-வது கிரிக்கெட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் மைதானத்தை சீரமைக்கும் பணிகள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

கான்பூர் மைதானத்தை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகி சுரு நாயக், கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தை ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து கான்பூர் மைதான பராமரிப்பு பணிகள் மிகவும் மெதுவாக நடைபெறுவதாக கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது. இருப்பினும் ஜனவரி முதல் வாரத்தில் கான்பூர் மைதானம் சீரமைக்கப்பட்டுவிடும் என்று உறுதியளித்திருக்கிறது.

அப்படி ஒப்படைக்கப்படாத நிலையில் கான்பூர் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் போட்டி நடைபெறாது என்றும் கூறப்படுகிறது.

English summary
City's Green Park stadium could lose its right to host the third Test between India and Australia, starting March 14 next year as the BCCI is unhappy with the slow progress of the renovation work at the ground and has set a January 2013 deadline for the UPCA to complete the work
கருத்தை எழுதுங்கள்