Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஒரே போட்டித் தொடரில் இரு முச்சதம்: பிராட்மேன் சாதனையை சமன் செய்த ஜடேஜா

Posted by:
Updated: Sunday, December 2, 2012, 17:30 [IST]
 

ஒரே போட்டித் தொடரில் இரு முச்சதம்: பிராட்மேன் சாதனையை சமன் செய்த ஜடேஜா
 

ராஜ்கோட்: ஒரே போட்டித் தொடரில் இரட்டை முச்சதம் அடித்த பிராட்மேன் போன்ற சாதனையாளர்கள் பட்டியலில் ரவீந்திர ஜடேஜாவும் இணைந்து இருக்கிறார்.

தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி போட்டியில் செளராஷ்டிரா அணிக்காக ஜடேஜா விளையாடி வருகிறார். கடந்த 12-ந் தேதி குஜராத் அணிக்கு எதிரான போடியில் 303 ரன்களை அடுத்து நாட் அவுட் ஆக இருந்தார் ஜடேஜா.

இன்றைய ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் முச்சதம் அடித்திருக்கிறார் ஜடேஜா. கடந்த ஆண்டும் இதேபோல் முச்சதம் அடித்தவர் ஜடேஜா. இந்திய அணியில் முதல் தர போட்டிகளில் முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமைக்குரியவராகியிருக்கிறார் ஜடேஜா.

இதேபோல் ஒரே போட்டித் தொடரில் முச்சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் பிராட்மேனுக்கு அடுத்த இடம் ஜடேஜாவுக்கு கிடைத்திருக்கிறது. 1935-36ஆம் ஆண்டில் பிராட்மேன் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தர். தற்போது ஜடேஜா இச்சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 6 முச்சதம் அடித்து தொடர்ந்து பிராட்மேன் முன்னிலையில் இருக்கிறார். இந்தியாவைப் பொறுத்தவரையில் ஜடேஜாதான் இந்தப் பட்டியலில் தற்போது இடம்பிடித்திருக்கிறார்.

Story first published:  Sunday, December 2, 2012, 17:29 [IST]
English summary
Ravindra Jadeja has matched Sir Don Bradman and other batting greats by scoring his third triple hundred in first-class cricket and second this season during the Ranji Trophy game here on Sunday.
கருத்தை எழுதுங்கள்