Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஆஸ்திரேலியாவை தூக்கிப் போட்டு மிதித்து வென்றது தென் ஆப்பிரிக்கா

Posted by:
Updated: Tuesday, December 4, 2012, 11:39 [IST]
 

பெர்த்: ரிக்கி பான்டிங்கின் கடைசி டெஸ்ட் போட்டி அவருக்கு மட்டுமல்லாமல் அவரது ஆஸ்திரேலிய அணிக்கும் மிகப் பெரிய கசப்பான முடிவைத் தந்து விட்டது. மிகப் பெரிய வித்தியாசத்தில் இப்போட்டியில் ஆஸ்திரேலியாவை நசுக்கி வென்ற தென் ஆப்பிரிக்க அணி நம்பர் ஒன் இடத்தையும் தக்க வைத்துக் கொண்டது.

ஆஸ்திரேலியாவை தூக்கிப் போட்டு மிதித்து வென்றது தென் ஆப்பிரிக்கா
இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்றதன் மூலம் 3 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் வென்று தொடரையும் கைப்பற்றி விட்டது தென் ஆப்பிரிக்கா. மேலும் டெஸ்ட் போட்டித் தர வரிசையில், முதலிடத்தையும் அது தக்க வைத்துள்ளது.

இறுதிப் போட்டியான இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற 623 என்ற இமாயல இலக்கை நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா. இதனால் மலைப்புடன் தனது 2வது இன்னிங்ஸை ஆஸ்திரேலியா தொடங்கியது. நான்காவது நாளான இன்று ஆஸ்திரேலியா 10 விக்கெட்களையும் பறி கொடுத்து 322 ரன்களுக்கே சுருண்டு போனது. இன்று காலை விக்கெட் இழப்பின்றி 40 ரன்களுடன் தொடங்கிய ஆஸ்திரேலியா அடுத்தடுத்து தனது விக்கெட்களைப் பறி கொடுத்து பச்சைக் குழந்தை போல பரிதவித்துப் போய் நின்றது. 82.5 ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் கதையை முடித்தனர் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள்.

இந்தப் போட்டிதான் பான்டிங்கின் கடைசிப் போட்டியாகும். தனது முதல் இன்னிங்ஸில் 4 ரன்கள் எடுத்த பான்டிங், 2வது இன்னிங்ஸில் வெறும் 8 ரன்களை மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிஸ்பேன் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு டெஸ்ட்களும் டிராவில் முடிந்தது நினைவிருக்கலாம்.

தற்போது டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்கா, இந்த தொடர் வெற்றி மூலம் அதைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

Story first published:  Monday, December 3, 2012, 15:17 [IST]
English summary
There was no winning farewell for Ricky Ponting in his final Test. South Africa crushed Australia by 309 runs to claim the series 1-0 and retain the number one Test ranking. On the fourth day of the third and final Test, the visitors grabbed all 10 Australian wickets today after they had resumed at 40/0. Chasing 623, Australia were bowled out for 322 in 82.5 overs.
கருத்தை எழுதுங்கள்