Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

''ஈடன் பிட்ச் கே பீச்சே கியா ஹே''?... குழப்பத்தில் டோணி அன் கோ!

Posted by:
Published: Tuesday, December 4, 2012, 14:01 [IST]
 

கொல்கத்தா: கியூரேட்டர் பிரபீர் முகர்ஜியை வேறு பகைத்துக் கொண்டாகி விட்டது. இப்போது பிட்ச் எப்படி இருக்குமோ என்ற பெரும் குழப்பத்தில் உள்ளனராம் இந்திய கிரிக்கெட் அணியினர்.

''ஈடன் பிட்ச் கே பீச்சே கியா ஹே''?... குழப்பத்தில் டோணி அன் கோ!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான பிட்ச் இப்படி இருக்க வேண்டும் என்று பழுத்த அனுபவம் வாய்ந்த ஈடன் கார்டன் பிட்ச் கியூரேட்டரான 83 வயது பிரபீர் முகர்ஜிக்கு கேப்டன் டோணி அட்வைஸ் தர அவரோ கொந்தளித்து விட்டார்.

டோணி கேட்பதையெல்லாம் தர முடியாது. அவர் நிலாவைக் கேட்பார், தூக்கிக் கொண்டு வந்து தந்து விட முடியுமா என்று கோபமாக கேட்டார். இடையில் பிரபீரை மாற்றிப் பார்க்க முனைந்தது கிரிக்கெட் வாரியம். ஆனால் அது பெரும் பிரச்சினையை எழுப்பியதால், அந்த முடிவிலிருந்து திரும்பி வந்து விட்டது வாரியம்.

இந்த நிலையில் பிரபீர் மேற்பார்வையிலேயே பிட்ச் தயாராகியுள்ளது. இதனால் பிட்ச் எப்படிப்பட்டதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக டோணிக்குத்தான் செம டென்ஷனாக இருக்கிறதாம்.

இந்திய அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர், பிட்ச் அருகே போய் அதைப் பார்வையி்ட்டார். அவருடன் கேப்டன் டோணியும் வந்து பிட்ச்சைப் பார்த்தார். கீழே உட்கார்ந்து முட்டிப் போட்டு பிட்ச்சைத் தட்டிப் பார்த்து ஆய்வு செய்தார் டோணி.

சம்பவத்தின்போது பிரபீர் முகர்ஜியும் அங்கேதான் இருந்தார். ஆனால் அவரை டோணி சந்திக்கவில்லை, பிரபீரும் டோணியை கண்டு கொள்ளவில்லை. இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் பார்த்த மாதிரி இருந்து கொண்டனர்.

இருப்பினும் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், பிரபீருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அதேபோல கெளதம் கம்பீரும் பிரபீருடன் பேசிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. இருவரும் பிட்ச் குறித்து பிரபீரிடம் கேட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

English summary
It was back to the grind for the Indian players on Monday. Having arrived in the city in batches on Sunday evening, they had their first practice session at the Eden Gardens here, the venue of the third Test match against England from Wednesday. There was no warm-up session or the usual jogging around the park as the players made a beeline for the nets, with opener Virender Sehwag leading the way. It was serious stuff all right as pacers Ishant Sharma, Ashok Dinda and off spinner R Ashwin took turns to bowl at one of the most destructive batsmen in contemporary world cricket.
கருத்தை எழுதுங்கள்