Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இந்தியா, பாக். கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யுங்கள்.. முத்தலிக் வலியுறுத்தல்!

Posted by:
Published: Tuesday, December 4, 2012, 13:06 [IST]
 

இந்தியா, பாக். கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யுங்கள்.. முத்தலிக் வலியுறுத்தல்!
 

பெங்களூர்: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி வருகிற 25ம் தேதி பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியே உடனே ரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் நாங்கள் மிக தீவிரமாக போராட்டம் நடத்துவோம்.

இந்தியாவில் பாகிஸ்தான் அணி கிரிக்கெட் விளையாட அனுமதிக்கக் கூடாது. பாகிஸ்தான் தீவிரவாதிகளால் இந்தியாவில் உள்ள அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்து உள்ளனர். இந்த சூழ்நிலையில் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தானை நம் மண்ணில் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு வழங்குவதை நாங்கள் ஏற்கமாட்டோம்.

இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. கிரிக்கெட் போட்டியை காண அந்த நாட்டை சேர்ந்த 3,000 பேருக்கு விசா வழங்க இந்தியா முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றன. அவர்கள் மூலம் கள்ளநோட்டு, போதைப் பொருள், கறுப்பு பணம் போன்றவற்றை நம் நாட்டில் புழக்கத்தில் விட்டு விடுவார்கள். மேலும், இந்த கிரிக்கெட் போட்டி நடந்தால் பெரிய அளவில் பெட்டிங் போன்ற முறைகேடுகள் நடைபெற அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

எனவே, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறினார் முத்தலிக்.

யார் இந்த முத்தலிக்?

ஸ்ரீராம் சேனா அமைப்பு இந்தியாவில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆண்டுதோறும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. மாரல் போலீஸ் என்ற பெயரில் கலாச்சார சீரழிவுகளைக் கண்டிப்பதாக கூறி இவர்கள் நடத்திய போராட்டங்கள் பல வன்முறையில் போய் முடிந்துள்ளன.

கடந்த 2009ம் ஆண்டு காதலர் தினத்தை எதிர்த்து ஸ்ரீராம் சேனா அறிவித்த போராட்டத்தால் வெகுண்ட பெண்கள் அமைப்பினர் பலர் அதன் தலைவர் பிரமோத் முத்தலிக்குக்கு இளஞ்சிவப்பு நிற பேண்டீஸ்களை அனுப்பும் போராட்டத்தை அறிவித்து பதிலடி கொடுத்தன.

இந்த இந்து அமைப்பின் போராட்டங்கள் எப்போதும் வன்முறையிலேயே முடிவதால் எரிச்சலாகிப் போன ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, இந்த அமைப்பிடமிருந்து தானே ஒதுங்கி விட்டது.

English summary
Sriram sena has urged the central govt to stop the Indo- Pak cricket match scheduled in Bangalore on Dec 25.
கருத்தை எழுதுங்கள்