Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சதம் ஜஸ்ட் 'மிஸ்'... 76 ரன்களில் ஆட்டமிழந்தார் சச்சின்!

Posted by:
Updated: Wednesday, December 5, 2012, 17:44 [IST]
 

சதம் ஜஸ்ட் 'மிஸ்'... 76 ரன்களில் ஆட்டமிழந்தார் சச்சின்!
 

கொல்கத்தா: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா நிதானமான ரன் குவித்து வந்த நிலையில் அவர் 76 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கேப்டன் டோணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

கம்பீரும், ஷேவாக்கும் ஆட்டத்தைத் தொடங்கினர். ஷேவாக் வேகமாக ஆடினார். ஆனால் 26 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்து வெளியேறினார். ஷேவாக் ரன் அவுட் செய்யப்பட்டார்.

இதையடுத்து கம்பீர், புஜாரா ஜோடி சேர்ந்தனர். கம்பீர் நிதானமாக ஆடினார். மறு முனையில் புஜாரா 16 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். கம்பீர் பொறுப்புடன் ஆடி வந்ததால் ரன் வேகம் சீராக இருந்து வந்தது. இந்த நிலையில் 60 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்து போனார் கம்பீர்.

அதன் பின்னர் சச்சினும், விராத் கோஹ்லியும் இணைந்து ஆடத் தொடங்கினர். சச்சின் நிதானமாக ஆட, விராத் கோஹலி சரியாக ஆடாமல் 6 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் சச்சினும், யுவராஜ் சிங்கும் ஜோடி சேர்ந்தனர். யுவராஜ் சிங் சற்றே வேகமாக ஆடினார். இருப்பினும் 32 ரன்களில் அவர் ஸ்வான் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து சச்சினும், கேப்டன் டோணியும் இணைந்து ஆடினர். இதில் சச்சின் தனது 101வது சர்வதேச சதத்தை எடுக்கும் வாய்ப்பு சற்று பிரகாசமாகவே இருந்தது. அவரும் சதத்தை நோக்கியே நிதானமாக முன்னேறி வந்தார். ஆனால் 76 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார் சச்சின்.

இதனால் இந்திய அணிக்கு மேலும் பலவீனமாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து ஆடவந்த அஸ்வின் 21 ரன் எடுத்தார். டோணி 22 ரன்களுடனும் ஜாஹிர் கான் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 273 ரன் எடுத்தது.

Story first published:  Wednesday, December 5, 2012, 8:51 [IST]
English summary
India captain MS Dhoni won the toss and elected to bat first against England in the third Test at the Eden Gardens here on Wednesday. Dhoni has now won all three tosses this series.
கருத்தை எழுதுங்கள்