Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கொல்கத்தா டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இங்கி. 216/1 இந்தியா 316!

Posted by:
Updated: Thursday, December 6, 2012, 17:21 [IST]
 

கொல்கத்தா: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2-வது நாள் ஆட நேர முடிவில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 216 ரன்களை எடுத்திருக்கிறது. முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்சில் 316 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது,

இந்தியா வருகை தந்துள்ள இங்கிலாந்து அணி மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டது. இதில் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளன. இத்தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.

கொல்கத்தா டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இங்கி. 216/1  இந்தியா 316!
இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இப் போட்டியில் இந்திய அணியில் ஹர்பஜன்சிங் நீக்கப்பட்டிருந்தார். அவருக்குப் பதிலாக இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட், பேர்ஸ்டோவ் நீக்கப்பட்டு இயன்பெல், ஸ்டீபன்பின் சேர்க்கப்பட்டனர்.

நேற்று தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது. ஷேவாக், புஜாரா ஆகியோர் 23 மற்றும் 16 ரன்களில் அவுட் ஆகினர். காம்பீர், தெண்டுல்கர், டோணி ஆகியோர் பொறுப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தினர். காம்பீர் 60, தெண்டுல்கர் 72 ரன்களை எடுத்திருந்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்களை இந்திய அணி எடுத்திருந்தது.

கேப்டன் டோணி 22 ரன்களிலும் ஜாகிர்கான் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். இன்று இரண்டாம் நாள் தொடக்கத்தில் கூடுதலாக 30 ரன்கள் எடுத்து அரசைதம் கடந்த நிலையில் டோணி அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் வந்த வீரர்கள் நிலைக்கவில்லை. 316 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய அணி இழந்தது.

இதைத் தொடர்ந்து பேட்டிங்கைத் தொடங்கிய அணி நிதானமாக ஆடி அதிவேகமாக ரன்களைக் குவித்திருக்கிறது. இங்கிலாந்து அணியின் குக் 136 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இன்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 216 ரன்களை எடுத்திருக்கிறது. இந்தியாவின் ஓஜாதான் அந்த 1 விக்கெட்டையும் பறித்திருந்தார்.

Story first published:  Thursday, December 6, 2012, 11:05 [IST]
English summary
India were all out for 316 in the first innings against England on the second day of the third cricket Test at the Eden Gardens here Thursday.
கருத்தை எழுதுங்கள்