Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கொல்கத்தா டெஸ்ட்டை இழந்தது இந்தியா - 7 வி. வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

Posted by:
Updated: Sunday, December 9, 2012, 10:20 [IST]
 

கொல்கத்தா டெஸ்ட்டை இழந்தது இந்தியா - 7 வி. வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
 

கொல்கத்தா: கொல்கத்தா 3வது டெஸ்ட் போட்டியை இந்தியா இன்று காலையில் இழந்தது. 7 விக்கெட் வித்தியாசத்தில் இப்போட்டியை இங்கிலாந்து வென்று, இந்தத் தொடரில் தொடர்ச்சியான 2வது வெற்றியைப் பெற்றது.

கொல்கத்தா போட்டியில், இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சிலும், பின்னர் பேட்டிங்கிலும் நம்மை துரத்தியடித்து விட்டது. இதனால் தோல்வியைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் இந்தியாவின் நிலை.இருப்பினும் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்து கொஞ்சமேனும் மானத்தைக் காப்பாற்றினார் அஸ்வின்.

இன்று காலை கடைசி நாள் ஆட்டத்தை அஸ்வினும், ஓஜாவும் தொடங்கினர். ஓஜா சிறிது நேரத்திலேயே ஆட்டமிழக்க இந்தியாவின் ஆட்டமும் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து 41 ரன்கள் என்ற மிக எளிய இலக்கைத் துரத்தத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு அஸ்வினும், ஓஜாவும் பெரும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.

அடுத்தடுத்து படு வேகமாக 3 விக்கெட்களைப் பறி கொடுத்து விட்டது இங்கிலாந்து. இதில் அஸ்வின் 2 விக்கெட்களைச் சாய்த்தார். ஓஜாவுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது. 3 விக்கெட்களை இழந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்து பின்னர் சுதாரித்து விட்டது.

இதையடுத்து நிதானமாக ஆடி பத்திரமாக கரை சேர்ந்து பார்மாலிட்டியை முடித்து வெற்றியைப் பதிவு செய்தது.

3 விக்கெட்களை மட்டும் இழந்து 41 ரன்களை எட்டிய இங்கிலாந்து அணிக்கு இது 2வது டெஸ்ட் வெற்றியாகும். இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து. இன்னும் ஒரே ஒரே டெஸ்ட் மட்டுமே பாக்கி இருப்பதால், இந்தியா இந்தத் தொடரை வெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடைசி டெஸ்ட்டில் நாம் வென்றால் தொடரை டிரை மட்டுமே செய்ய முடியும்.

Story first published:  Sunday, December 9, 2012, 9:58 [IST]
English summary
India were all out for 247 in their second innings, setting England a target of 41 runs on the fifth and final day of the third cricket Test here today.
கருத்தை எழுதுங்கள்