Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

4-வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்திய அணியிலிருந்து யுவராஜ், ஜாகிர், ஹர்பஜன்சிங் நீக்கம்

Posted by:
Published: Sunday, December 9, 2012, 14:10 [IST]
 

4-வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்திய அணியிலிருந்து யுவராஜ், ஜாகிர், ஹர்பஜன்சிங் நீக்கம்
 

கொல்கத்தா: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுகேவலமாக விளையாடி வரும் இந்திய அணியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்திய அணியில் இருந்து யுவராஜ்சிங், ஜாகிர்கான், ஹர்பஜன்சிங் ஆகியோர் நீக்கப்பட்டிருக்கின்றனர். சொற்ப ரன்களே எடுத்து வரு சச்சின் தெண்டுல்கர் தொடர்ந்து அணியில் நீடிக்கிறார்.

இங்கிலாந்துடன் இதுவரை 3 கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. இந்த மூன்றில் 2 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருக்கிறது. இந்திய அணி தொடர்ந்தும் மிக மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. ஆனால் கேப்டன் டோணியோ பிட்ச் சரியில்லை. பிட்ச் சரியில்லை என்றே புலம்பிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் கொல்கத்தாவில் இன்று கூடிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய அணியில் அதிரடியான மாற்றங்களை மேற்கொண்டது. அணியில் இருந்து யுவராஜ்சிங், வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர்கான் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் ஆகியோர் நீக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்குப் பதிலாக ப்யூஸ் சாவ்லா, ஜடேஜா, பர்விந்தர் அவானா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

நாக்பூரில் வரும் 13-ந் தேதி நடைபெறும் 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியிலாவது இந்திய அணி தேறுமா?

English summary
Indian Cricket team selectors dropped Yuvaraj Sinh, Harbajan Singh and Zaheer Khan from the 4th test match against England.
கருத்தை எழுதுங்கள்