Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

தோல்வியை பற்றி கொஞ்சமும் கவலைப்படாத இந்திய கிரிக்கெட் வீரர்கள்: 'வெளுக்கும்' கவாஸ்கர்

Posted by:
Published: Monday, December 10, 2012, 19:00 [IST]
 

தோல்வியை பற்றி கொஞ்சமும் கவலைப்படாத இந்திய கிரிக்கெட் வீரர்கள்:  'வெளுக்கும்' கவாஸ்கர்
 

டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்த தொடர் தோல்விகளைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் இருக்கும் இந்திய வீரர்கள் மனநிலை குறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கவலை தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணியின் தொடர் தோல்வி மற்றும் தேர்வுக் குழுவின் புதிய அணுகுமுறை பற்றி அவர் கூறுகையில், போட்டி நடைபெறும் போது ஆடுகளத்தில் இருக்கும் வீரர்களுக்கு வழிகாட்டுவது என்ற கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவரின் முடிவு வரவேற்கத்தக்கது. பேட்டிங் செய்யும் போது சில ஷாட்டுகளை தவறவிட்டால் உடனே சுட்டிக்காட்டவும், சரியாக பந்துவீசவில்லை எனில் எப்படி போட வேண்டும் என்றும் அறிவுறுத்த தேர்வுக் குழு முடிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

தோல்விகள் என்பது இந்திய வீரர்களின் மனதை பாதிக்க வேண்டும். ஆனால் சில வீரர்கள் ஜாலியாக சிரித்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இது ஆரோக்கியமான மனநிலை அல்ல.. இந்த நிலைமை மாற வேண்டும்.

கடந்த ஆண்டுகூட மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் கடைசி நாளில் இந்தியா வெற்றி பெறக் கூடிய நிலையில்தான் இருந்தது. ஆனால் முதல் பந்துவீசுவதற்கு 30 நிமிடத்துக்கு முன்புதான் மைதானத்துக்கு வந்தனர்.. அவர்கள் ஓய்வறையைவிட்டு வெளியேறி வந்து பயிற்சிகளில் ஈடுபட்டு தங்களை தயார்படுத்த விரும்பாதவர்களாகவே இருக்கின்றனர் என்றார் அவர்.

இதேபோல் இந்தியாவின் பயிற்சியாளர் ப்ளெச்சர் குறித்து கூறுகையில், ஒரு வீரரின் பார்மை முன்பே கண்காணித்து தகவல் தெரிவிக்காமல் போனால் நிச்சயமாக உங்களால் அந்த வீரரை கட்டுப்படுத்த முடியாது. இதுபோன்ற அணுகுமுறை கடந்த ஓராண்டாகவே இருந்து வருகிறது... இதில் எனக்கு கொஞ்சம் வருத்தம்தான் என்றார் கவாஸ்கர்.

English summary
Former India skipper Sunil Gavaskar blasted Team India players for their attitude, as they played football after losing the Eden Test to England by 7 wickets.
கருத்தை எழுதுங்கள்