Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

நானா இருந்தா ஓய்வு பெற்றிருப்பேன்: டெண்டுல்கருக்கு கங்குலி அட்வைஸ்

Posted by:
Published: Monday, December 10, 2012, 18:57 [IST]
 

நானா இருந்தா ஓய்வு பெற்றிருப்பேன்: டெண்டுல்கருக்கு கங்குலி அட்வைஸ்
 

டெல்லி: கிரிக்கெட் போட்டிகளில் ரன்கள் எடுக்க முடியாமல் திணறும் சச்சின் டெண்டுல்கர் தமது எதிர்காலத்தைப் பற்றி முடிவெடுக்க வேண்டிய தருணம் இது என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியிருக்கிறார்.

டெண்டுல்கர் கடந்த 5 இன்னிங்சில் மொத்தமே 110 ரன்களைத்தான் எடுத்திருக்கிறார். அதாவது சராசரியாக 22 ரன்களைத்தான் எடுக்க முடிகிறது. அதிகபட்சமாக கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் 76 ரன்களை எடுத்திருந்தார். அதேபோல் நீண்டகாலமாக அவரால் சதமடிக்கவும் முடியவில்லை. இங்கிலாந்துடனான அடுத்த டெஸ்ட் போட்டியில்கூட யுவராஜ்சிங், ஜாகீர்கான், ஹர்பஜன் நீக்கப்பட்டாலும் சச்சின் சேர்க்கப்பட்டுதான் இருக்கிறார். சச்சினை சேர்க்கலாமா? வேண்டாமா? என்று தேர்வுக் குழு நிச்சயமாக விவாதித்திருக்கும்.

இதுபற்றி கருத்து தெரிவித்த முன்னாள் கேப்டன் கங்குலி, இப்படியான ஒரு நிலையை டெண்டுல்கர் சந்திக்க வேண்டிய தேவை இல்லை என்கிறார்.

மேலும், ரன்கள் எடுப்பதற்காக சச்சின் போராடிக் கொண்டிருக்கிறார். அவர் நிறைய சாதனைகளை செய்துவிட்டார். அவருக்கு அவரைப் பற்றி நன்கு தெரியும்தான்..

வெளியில் இருந்து அவரது ஆட்டத்தை சிலர் பார்க்கும் போது சரியாக விளையாடவில்லை என்றுதான் கருத முடிகிறது. டெண்டுல்கர் இப்போது இருக்கும் நிலையில் நான் இருந்தால் நிச்சயமாக ஓய்வு பெற்றுவிடுவேன். அதே நேரத்தில் மிகச் சிறந்த வீரரான தெண்டுல்கர் நல்ல பார்மில்தான் ஓய்வு பெற வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம் என்றார் அவர்.

Read more about: sachin, ganguly, கங்குலி
English summary
Former India skipper Sourav Ganguly has criticized struggling Sachin Tendulkar and said that it was time for the master blaster to take a call on his future.
கருத்தை எழுதுங்கள்