Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

நாக்பூர் கிரிக்கெட்: இந்தியாவின் விளையாட்டு இது... சேவாக்-0, டெண்டுல்கர்-2; 87/4!!

Posted by:
Updated: Friday, December 14, 2012, 16:59 [IST]
 

நாக்பூர் கிரிக்கெட்: இந்தியாவின் விளையாட்டு இது... சேவாக்-0, டெண்டுல்கர்-2; 87/4!!
 

நாக்பூர்: இங்கிலாந்து அணிக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மட்டும் இந்தியா சூப்பராக சொதப்பாமல் இருக்குமா என்ன? இன்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 87 ரன்களை எடுத்திருக்கிறது இந்திய அணி.

நாக்பூரில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 330 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நேற்று தொடங்கிய போட்டியின் முதல் நாளில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க நிலை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பீட்டர்சனும் டிராட்டும் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை அந்த அணி எடுத்திருந்தது. இங்கிலாந்தின் ஜோரூட்டும் பிரையரும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்தின் பீட்டர்சன் 73 ரன்கள் எடுத்திருந்தார்.

இன்றைய -2வது நாள் ஆட்டத்தையும் கொஞ்சம் நிதானமாகவே இங்கிலாந்து ஆடியது. களத்தில் இருந்த பிரையரும் ஜோரூட்டும் அரை சதத்தை கடந்தனர். ஆனால் பிரையர் அரை சதம் கடந்த சிறிது நேரத்தில் ஓஜாவின் பந்தில் போல்டு ஆனார். பின்னர் ஆடிய பிரெஸ்னெனும் அவுட் ஆக அதிர்ச்சியில் உறைந்தது இங்கிலாந்து. ஸ்வான், ஜோரூட் ஜோடி இணைந்து உணவு இடைவேளை வரை 277 ரன்களை சேர்த்தது. பின்னர் 73 ரன்கள் எடுத்த நிலையில் ஜோரூட் அவுட் ஆனார். அப்போது இங்கிலாந்து அணி 302 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடியவர்களும் நீண்ட நேரம் நிலைக்காத நிலையில் 330 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழந்தது.

தொடர் தோல்விகள், கடும் விமர்சனங்களுக்கு இடையே பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் திராணி முதல் ஓவரிலேயே தெரிந்துவிட்டது. 1 ரன் எடுத்த நிலையில் சேவாக் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

பின்னர் காம்பீருடன் புஜாரா இணைந்து பரவாயில்லையே என நினைக்கும்போது இந்திய அணி 59 ரன்களை எடுத்திருந்தது. 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் புஜாரா அவுட் ஆனார்.

அடுத்து களமிறங்கிய டெண்டுல்கர், என்ன செய்வார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க ‘சூப்பர்' விருந்தாக 2 ரன்கள் மட்டுமே எடுத்து போல்டு ஆனார்! அப்போது இந்திய அணி 64 ரன்களைத்தான் எடுத்திருந்தது! காம்பீர் தொடர்ந்து நிற்க கோஹ்லி வந்தார். அடுத்த 5 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில் அவரும் அவுட் ஆகிப் போனார். அவர் எடுத்த மொத்த ரன்கள் 37

தற்போது கோஹ்லியும் கேப்டன் டோணியும் களத்தில் நிற்கின்றனர். கோஹ்லி 11 ரன்களையும் டோணி 8 ரன்களையும் எடுத்திருக்கிறார். இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 87 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறது.

இங்கிலாந்தின் ஆண்டர்சன் 3 இந்திய விக்கெட்டுகளை பறித்தார்.

Story first published:  Friday, December 14, 2012, 14:07 [IST]
English summary
England were 277/7 in their first innings at lunch on the second day of the fourth and final cricket Test against India in Nagpur on Friday.
கருத்தை எழுதுங்கள்