Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இங்கிலாந்தின் ஆண்டர்சனிடமே அதிகம் அவுட் ஆன டெண்டுல்கர்

Posted by:
Published: Saturday, December 15, 2012, 10:07 [IST]
 

இங்கிலாந்தின் ஆண்டர்சனிடமே அதிகம் அவுட் ஆன டெண்டுல்கர்
 

நாக்பூர்: இனியும் டெண்டுல்கர் இந்திய அணியில் தொடர்வாரா? என்கிற கேள்வியை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் ஆடிய விதம் இன்னும் அதிகரித்திருக்கிறது. 4-வது போட்டியில் 2-வது நாள் ஆட்டத்தில் வெற்றிகரமாக டெஸ்ட் போட்டியில் 53 முறையாக போல்டு ஆகியிருக்கிறார் டெண்டுல்கர்.

டெண்டுல்கர் விளையாடுகிற 194-வது டெஸ்ட் இது. இந்தப் போட்டியில் 2 ரன்களை மட்டும்தான் டெண்டுல்கரால் எடுக்க முடிந்தது. ஆண்டர்சன் பந்தில் கிளீன் போல்டு ஆகி வெளியேறினார். ஆண்டர்சனால் டெண்டுல்கர் அவுட் ஆக்கப்படுவது இது 9 வது முறை. இதற்கு முன்பு 8 முறை இலங்கையின் முரளீதரனிடம் அவுட் ஆகி இருக்கிறார் டெண்டுல்கர்.

டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அதிகமாக போல்டு ஆனவர் டிராவிட்தான். இதற்கு அடுத்த 2-வது இடமும் டெண்டுல்கருக்கே கிடைத்திருக்கிறது. நேற்றைய ஆட்டத்துடன் சேர்த்து மொத்தமாக 53 முறை கிளீன் போல்டு ஆகியிருக்கிறார் டெண்டுல்கர்!

39 வயதாகும் டெண்டுல்கருக்கு இதுவே கடைசி டெஸ்ட் தொடராக இருக்கலாம் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது

English summary
England's James Anderson surpasses Muttaiah Muralitharan's record to became the most successful bowler against master blaster Sachin Tendulkar having dismissed him on nine occasions in Tests. Anderson claimed his 'bunny' Tendulkar for the ninth time in Tests, second in the series after Kolkata.
கருத்தை எழுதுங்கள்