Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

நாக்பூர் கிரிக்கெட்: கோஹ்லி சதம்- டோணி-99! இந்தியா 297/8!

Posted by:
Updated: Saturday, December 15, 2012, 17:13 [IST]
 

நாக்பூர் கிரிக்கெட்: கோஹ்லி சதம்- டோணி-99! இந்தியா 297/8!
 

நாக்பூர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 3-வது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 8விக்கெட் இழப்புக்கு 297 ரன்களை எடுத்திருக்கிறது. இந்திய அணியின் விராத் கோஹ்லி சதமடித்தார். கேப்டன் டோணி 99 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இங்கிலாந்து அணியுடனான நாக்பூர் டெஸ்ட் போட்டி 13-ந் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணி தடுமாறியபோதும் 330 ரன்களை எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணியின் விக்கெட்டுகள் தொடக்கத்தில் சரியத் தொடங்கின. நேற்று தொடக்கத்தில் களமிறங்கிய சேவாக் ரன் எதுவுமே எடுக்காமல் முதல் ஓவரிலேயே அவுட் ஆகிப் போகினார்.

பின்னர் சச்சின் டெண்டுல்கர் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அவரை ஆண்டர்சன் அவுட் ஆக்கினார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் என்ற பரிதாப நிலையில் இருந்தது.

கேப்டன் டோணி 8 ரன்களுடனும் கோஹ்லி 11 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்றைய 3-ம் நாள் ஆட்டத்தில் இருவரும் நிதானமாக நிலைத்து நின்று ஆடினர். விராத் கோஹ்லி சதமடித்த நிலையில் 106 ரன்களுடன் அவுட் ஆகி வெளியேறினார். கோஹ்லியும் டோணியும் இணைந்து இந்திய அணியின் மானத்தைக் காப்பாற்றினர். டோணியுடன் இணைந்த ஜடேஜா நீண்ட நேரம் நிற்கவில்லை. 12 ரன்களுடன் நடையைக் கட்டினார். கேப்டன் டோணி சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 99 ரன்களில் அவுட் ஆனார். அதன் பின்னர் களத்தில் நின்ற அஸ்வினுடன் பியூஷ் சாவ்லா சேர்ந்தார். 2 பந்துகளை சந்தித்து ஒரே ஒரு ரன் எடுத்த நிலையில் அவர் அவுட் ஆக இன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது. அஸ்வின் மட்டும் 7 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். 8 விக்கெட் இழப்புக்கு 297 ரன்களை எடுத்திருக்கிறது இந்தியா.

கடந்த போட்டியில் நன்றாக விளையாடிய அஸ்வின் இம்முறை எப்படி விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. எஞ்சிய இருவரும் எப்படி ரன்களை எடுக்கப் போகிறார்கள்?என்பது நாளை தெரியவரும்.

Story first published:  Saturday, December 15, 2012, 12:05 [IST]
English summary
In Nagpur Cricket test match India slowly move to the targest. Now India 146/4...
கருத்தை எழுதுங்கள்