Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

நாக்பூர் கிரிக்கெட் டெஸ்ட் : 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 161/3

Posted by:
Updated: Sunday, December 16, 2012, 17:10 [IST]
 

நாக்பூர் கிரிக்கெட் டெஸ்ட் : 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 161/3
 

நாக்பூர்: நாக்பூரில் நடைபெற்று வரும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை எடுத்திருக்கிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா தொடர் தோல்விகளைத் தழுவி வருகிறது. இந்த நிலையில் நாக்பூர் கிரிக்கெட் டெஸ்ட் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

நாக்பூர் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் அந்த அணி 330 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.அதன் பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணி முதலில் தடுமாறியது. பின்னர் கேப்டன் டோணி- விராத் கோஹ்லி ஜோடியால் நிமிர்ந்தது. நேற்றைய 3-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 297 ரன்களை எடுத்திருந்தது. இன்று 4-ம் நாள் ஆட்டத்தை அஸ்வினும் ஓஜாவும் தொடங்கினர். ஓஜா 3 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினார். அஸ்வின் 29 ரன்களையும் இஷாந்த் சர்மா 2 ரன்களையும் எடுத்த நிலையில் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக இந்திய அணி டிக்ளேர் செய்தது. மொத்தம் 326 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 330 ரன்களை எடுத்திருந்தது.

பழிதீர்த்த டோணி

இந்திய அணியை விட 4 ரன்கள் முன்னிலை வகித்த இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. கேப்டன் குக்கும் காம்பட்டனும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நிதானமாக ரன்களை சேர்த்து வந்தனர். அந்த அணியின் ஸ்கோர் 48 ஆக இருந்த போது அஸ்வின் வீசிய பந்தில் குக்கை கேப்டன் டோணி போல்டு ஆக்கி பழிதீர்த்தார். கேப்டன் டோணி 99 ரன்கள் எடுத்த நிலையில் அவரை சதம் அடிக்க விடாமல் ரன் அவுட் செய்திருந்தார் குக். இந்த இன்னிங்சில் குக் 13 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது. காம்ப்ட்டனும் நீண்ட நேரம் நிற்கவில்லை. 34 ரன்களை அவர் எடுத்திருந்தபோது ஓஜா பந்தில் எல்.பி.டபிள்யூ அவுட் ஆனார். 2 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் என்ற நிலையில் தடுமாறிய இங்கிலாந்து அணி நினைத்துப் பார்க்க முடியாத அதிர்ச்சியாக அடுத்த 13 ரன்களில் பீட்டர்சன் விக்கெட்டை பறிகொடுத்தது. இதன் பின்னர் சுதாரித்து ஆடிய இங்கிலாந்து அணி இன்றைய ஆட்ட நேரத்தின் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்களை எடுத்திருக்கிறது.

தற்போது இந்திய அணியை விட மொத்தம் 165 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கிறது.

Story first published:  Sunday, December 16, 2012, 11:04 [IST]
English summary
India allowed England a narrow lead of 4 runs as the hosts declared their first innings at 326/9 in the morning session on the fourth day of the Nagpur Test.
கருத்தை எழுதுங்கள்