Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இந்தியா, பாக். 2வது டுவென்டி 20 போட்டி ஒரு நாள் தள்ளிவைப்பு

Posted by:
Published: Sunday, December 16, 2012, 16:12 [IST]
 

இந்தியா, பாக். 2வது டுவென்டி 20 போட்டி ஒரு நாள் தள்ளிவைப்பு
 

மும்பை: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான 2வது டுவென்டி 20 போட்டி ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் இந்தியா வரவுள்ளது. இங்கு 2 டுவென்டி 20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடவுள்ளது.

டிசம்பர் 25ம் தேதி தொடங்கி ஜனவரி 6ம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதில் 2வது டுவென்டி போட்டி டிசம்பர் 27ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதை மாற்றி, டிசம்பர் 28ம் தேதி போட்டி நடைபெறும் என கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

மற்ற போட்டிகள் மற்றும் இடங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

English summary
The second Twenty20 International between India and Pakistan has been postponed by one day, the Board of Control for Cricket in India (BCCI) announced on Saturday. Originally scheduled for December 27 in Ahmedabad, now the second T20I will be held on December 28, BCCI said in a media statement.
கருத்தை எழுதுங்கள்