Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

நாக்பூர் டெஸ்ட் டிரா! 28 ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் தொடரை வென்ற இங்கிலாந்து!

Posted by:
Updated: Tuesday, December 18, 2012, 11:56 [IST]
 

நாக்பூர் டெஸ்ட் டிரா! 28 ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் தொடரை வென்ற இங்கிலாந்து!
 

நாக்பூர்: இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனால் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

நாக்பூர் டெஸ்ட் கிரிக்க்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 330 ரன்களை எடுத்தது. இந்திய அணி 2 விக்கெட் இருந்த போதும் 326 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் 4 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை நேற்று தொடங்கியது. இங்கிலாந்து அணி மிகவும் மந்தமாகவே விளையாடியது. கேப்டன் குக்கின் ஆட்டமும் அப்படியாகத்தான் இருந்தது. அவர் தாம் சந்தித்த 27-வது பந்தில்தான் முதல் ரன்னையே எடுத்தார். 61 பந்துகளில் 3 ரன்களைத்தான் எடுத்தார். அவர் 13-வது ரன்னில்  அஸ்வின் பந்தில் கேப்டன் டோணியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னர் ஆட வந்த டிராட், காம்ப்டனுடன் இணைந்தார். காம்ப்டன் 34 ரன்களில் ஓஜா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து அதிர்ச்சியாக பீட்டர்சன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். களத்தில் நின்ற டிராட் உடன் பெல் ஜோடி சேர்ந்தார். இருவரும் 4-வது நாள் ஆட்டம் முடியும் வரை அவுட் ஆகவில்லை. 4-வது நாளான நேற்று ஆட்ட நேரத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 161 ரன்கள் எடுத்திருந்தது. மொத்தமாக இந்திய அணியைவிட 165 ரன்களை இங்கிலாந்து எடுத்திருக்கிறது.

5வது நாளான இன்று, இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடி வந்த நிலையில், ஆட்டம் டிராவில் முடிந்தது. இங்கிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்களை எடுத்திருந்த போது ஆட்டம் டிரா ஆனது. 1984- 85ல் இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. அதன் பிறகு 28 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.

இந்திய அணியும் 8 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது.

Story first published:  Monday, December 17, 2012, 9:36 [IST]
English summary
A desperate India's push for a series-levelling win was met with a dogged resistance from England who rode on Jonathan Trott's gritty half-century to overcome a nervous phase as the fourth and final cricket Test seemed headed for a draw in Nagpur.
கருத்தை எழுதுங்கள்