Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

தொடர்ந்து தோற்கும் இந்திய அணி'!-தூக்கி நிறுத்த ஐந்து வழி!

Posted by:
Updated: Tuesday, December 18, 2012, 16:14 [IST]
 

மும்பை: தொடர் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்திய அணியை தூக்கி நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்பதுதான் இப்போது கிரிக்கெட் ரசிகர்களின் கேள்வி..

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை பறிகொடுத்து பழிசுமந்து நிற்கிறது இந்திய அணி. இங்கிலாந்து நாட்டுக்குப் போய் தோற்ற இந்திய அணி, தாயகத்திலும் அவமானமாக தோல்வியை சந்தித்தது. தரவரிசையில் 5வது இடத்துக்குப் போய்விட்டது! முதல் 3 போட்டிகளில் படுதோல்வியை சந்தித்த பிறகுதான் அணியில் 'டிங்கரிங்' வேலையை தேர்வுக் குழு செய்தது. இரண்டு போட்டிகளில் சொதப்பிய பொழுதே டெண்டுல்கரை தூக்கியிருக்கலாமே என்ற கேள்வியும் எழாமல் இல்லை.. அவர் தூண் போல வந்துவிளையாடிவிட்டு சொற்ப ரன்களில் அவுட் ஆகிவிட்டுப் போய்விடுகிறார். இதனால் இந்திய அணி மீதான விமர்சனங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.. டெண்டுல்கர் ஓய்வை அறிவிப்பதுதான் நல்லது என்று பெருங்குரல் கேட்கிறது.. டோணியை தூக்கிவிட்டு வேறு ஒருத்தரை போடுங்க என்று மற்றொரு பக்கம் முழக்கம் கேட்கிறது.. நாங்க நல்லாத்தான் இருக்கோம்.. எந்த பிட்சுமே சரியில்லை என்று மண்ணைக் கவ்விய மன்னன் டோணி கூறி வருகிறார்.

சரி என்னவெல்லாம் செய்தால் இந்திய அணி தேறும்? இதைச் செய்யலாமா?

டோணியை நீக்குதல்

இந்திய அணிக்கு கவுதம் கம்பீர் 6 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்திருக்கிறார். அந்த 6 போட்டியிலும் இந்தியாவுக்கு வெற்றி முகம்! சேவாக் தலைமையில் 4 டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கிய இந்திய அணி 2-ல் வென்றது. ஒன்று டிராவில் முடிய மற்றொன்றில் தோல்வியைத் தழுவியது. இதேபோல் கோஹ்லி கூட ஓகேதான். இருந்தாலும் டோணியை தூக்கிவிட்டு கவுதம் கம்பீரை கேப்டனாக டெஸ்ட் மேட்ச் கேப்டனாக போட்டுவிடலாம்

இந்திய பயிற்சியாளர்

இந்தியாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இருக்க...வெளிநாட்டுப் பயிற்சியாளர் எதற்கு? ப்ளச்சரை அனுப்பி வைத்துவிட்டு இந்த மாதிரி செய்யலாம்.

ஸ்பின்னிங்- பிஷன்சிங் பேடி, பெளலிங்- வெங்கடேஷ் பிரசாத், தலைமை கோச்- கங்குலி, பேட்டிங்- ராகுல் டிராவிட், விவிஎஸ் லஷ்மண், ஜி. விஸ்வநாத், பீல்டிங்-ராபின்சிங் ஆகியோரை நியமிக்கலாம்.

 

தேர்வுக் கமிட்டி

கொல்கத்தா தோல்விக்குப் பிறகு தேர்வுக் குழுவில் டோணியை நீக்குவது பற்றி பேசினோம் என்று மொகிந்தர் அமர்நாத் சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். பொறுப்பில்லாமல் ஆடுகிற எவராக இருந்தாலும் அவரை அணியிலிருந்து தூக்குகின்ற திடமான முடிவெடுக்கக் கூடிய தேர்வுக் கமிட்டிதான் இப்போதைய தேவை.

அணி வகைகள்

டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டிகள், டி 20க்கு என தனித்தனியே இந்திய அணிகள் உருவாக்கப்பட வேண்டும். அஸ்வின், கோஹ்லி, சேவாக், டோணி, கம்பீர் இவர்கள் எல்லாம் ஒரு அணியாக ஏதோ ஒன்றில் மட்டும் விளையாடுவது.. மற்ற போட்டிகளில் பங்கேற்கக் கூடாது. இப்படி செய்தால் அவர்களது ஈடுபாடு ஒன்றில் மட்டும்தான் இருக்க வாய்ப்பிருக்கிறது.

முன் தயாரிப்பு

எந்த அணியையுமே ரொம்ப எளிதாக எடைபோடுவதை தவிர்த்துவிடுவது ரொம்ப முக்கியம். அண்மையில் கவாஸ்கர் கூட கூறியிருந்தார்.. அதாவது போட்டி ஆரம்பிக்க 30 நிமிடத்துக்கு முன்னர்தான் நமமாளுக கிரவுண்ட்டில் கால் வைக்கிறார்கள் என்று... எப்பவுமே தயாராக இருக்க வேண்டிய பயிற்சி மன நிலை குறைந்துபோய்விட்டது. இப்படி இருந்தா அவமானமாக தோற்காமலாவது இருக்கலாம்

குளோனிங் செய்யலாம்

இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று இந்திய கிரிக்கெட் வாரியமும், தேர்வுக் குழுவும் நினைத்தால் பேசாமல் கபில்தேவ் உள்ளிட்டோரை குளோனிங் மூலம் உருவாக்கி அவர்களை அணியில் சேர்த்து விளையாட விடலாம்...!

Story first published:  Tuesday, December 18, 2012, 16:09 [IST]
English summary
Following Team India's dismal show in the last one year, Team India has slipped to the fifth place in Test rankings. With the current scenario alarming, Team India needs a few changes in order to become successful. Though it is acceptable that Team India is undergoing a transition after the likes of Rahul Dravid, VVS Laxman announcing their retirement from the game, guess the team needs a total make ove
கருத்தை எழுதுங்கள்