Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கிரிக்கெட்: தரவரிசைப் பட்டியலில் முதல் 20 இடத்தில் இந்திய வீரர் யாரும் இல்லை!

Posted by:
Published: Wednesday, December 19, 2012, 10:39 [IST]
 

கிரிக்கெட்: தரவரிசைப் பட்டியலில் முதல் 20 இடத்தில் இந்திய வீரர் யாரும் இல்லை!
 

கிரிக்கெட்: தரவரிசைப் பட்டியலில் முதல் 20 இடத்தில் இந்திய வீரர் யாரும் இல்லை!

துபை: இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் போட்டியில் படுதோல்வியைச் சந்தித்திருக்கும் நிலையில் தரவரிசைப் பட்டியலில் முதல் 20 இடத்தில் எந்த இந்திய வீரரும் இடம்பெறவில்லை.

இங்கிலாந்துடனான தொடரில் மொத்தமே 112 ரன்களை மட்டுமே எடுத்திருந்த சச்சின் 19-வது இடத்தில் இருந்து 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதேபோல் சேவாக், புஜாரா ஆகியோர் 25,26 -ஆவது இடங்களுக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

கோஹ்லி 41-வது இடத்திலிருந்து 37-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார். டோணி அதே 38-வது இடத்தில் இருக்கிறார்.

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஓஜா 9-வது இடத்திலும் அஸ்வின் 20-வது இடத்திலும் இருக்கின்றனர். ஜாகீர் கான் 15-வது இடத்திலும் இஷாந்த் சர்மா 32-வது இடத்திலும் இருக்கின்றனர்.

English summary
Sachin Tendulkar today slipped out of the list of top-20 Test batsmen after his awful run in the just-concluded four-match series against England while Australia skipper Michael Clarke regained the numero uno position.
கருத்தை எழுதுங்கள்