மும்பை: இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5 பகல்-இரவு ஒருநாள் போட்டிகளின் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. அனைத்துமே பகல் இரவுப் போட்டிகள் ஆகும். இந்தப் போட்டிகளின் நேரத்தை தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் மாற்றியமைத்துள்ளது.
ஜனவரி 11ம் தேதி ராஜ்கோட்டிலும், 15ம் தேதி கொச்சியிலும், 19ம் தேதி ராஞ்சியிலும், 23ம் தேதி மொஹாலியிலும் முதல் நான்கு போட்டிகள் நடைபெறும். இந்தப் போட்டிகள் அனைத்தும் பிற்பகல் 12 மணிக்குத் தொடங்கும்.
5வது மற்றும் கடைசிப் போட்டி தர்மசலாவில் நடைபெறும். இப்போட்டி பகல் நேரப் போட்டியாக இருக்கும். காலை 9 மணிக்குப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாகவே நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாம்.










