Search
Newsletter
 
Share This Story

பிப்ரவரி 3ல் ஐபிஎல் வீரர்கள் ஏலம்

Posted by:
Published: Friday, December 21, 2012, 14:13 [IST]

Pepsi Ipl Players Auction On Feb 3
 

பெங்களூர்: ஐபிஎல் வீரர்கள் ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி நடைபெறவுள்ளது. இதை ஐபிஎல் தலைமை செயலதிகாரி சுந்தர் ராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஏலம் நடைபெறும் இடம் இன்னும் முடிவாகவில்லை என்று கூறியுள்ளார்.

முன்னதாக இந்த ஏலம் ஜனவரி 12ம் தேதி சென்னையில் தொடங்கி கொல்கத்தாவில் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இடம் முடிவாகவில்லை என்றும், தேதியை மாற்றியும் சுந்தர் ராமன் டிவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணி நிர்வாகமும், ரூ. 1.25 கோடி வரை பணத்தை வீரர்கள் ஏலத்தின்போது செலவிட முடியும். மொத்தம் 33 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கவுள்ளனர். இவர்களில் 11 பேர் வெளிநாட்டு வீரர்கள்.

English summary
Players' auction for the Pepsi IPL is likely to be held on Feb 3, 2013 while the place has not been confirmed yet.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil