மும்பை: தாயகத்தில் டெஸ்ட் தொடரை பறிகொடுத்து கடும் விமர்சனத்துக்குள்ளான இந்திய அணி 20 ஓவர் தொடரை வெல்லுமா என்ற கேள்விக்கு இன்று இரவு பதில் கிடைத்துவிடும்.
டெஸ்ட் தொடரைப் பறிகொடுத்து மிகக் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியிருந்த இந்திய அணி, புனேயில் நடைபெற்ற 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா, இங்கிலாந்தை தோற்கடித்தது.
இந்நிலையில் இரு அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது. இன்றைய போட்டியிலும் வென்று தொடரை இந்தியா கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்திய அணியில். ரஹானே, கவுதம் கம்பீர், விராட் கோக்லி, யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா, டோனி, ரவீந்திர ஜடேஜா அல்லது ரோகித் ஷர்மா, பியுஷ் சாவ்லா, அஸ்வின், அசோக் திண்டா, பர்விந்தர் அவனா அல்லது புவனேஷ்வர்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முதல் போட்டியில் ரன்களை அள்ளிக் கொடுத்த அவனா அனேகமாக மாற்றப்படக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.
இங்கிலாந்து அணியில், மைக்கேல் லம்ப், அலெக்ஸ் ஹாலஸ், லுக் ரைட், மோர்கன், சமித் பட்டேல், பட்லர், பிரிஸ்னன், டேனி பிரிக்ஸ், டெர்ன்பேச் அல்லது ஜேம்ஸ் ஹாரிஸ், மீகெர், டிரெட்வெல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.









