மும்பை: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கும் சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர், ஒரே ஆண்டில் 12 சதங்களை அடித்து பட்டையைக் கிளப்பியவர்.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 100 சதங்களை அடித்த முதலாவது உலக வீரர் என்ற பெருமைக்குரியவர் சச்சின்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட்(11) மற்றும் ஒருநாள்(9) போட்டிகளில் மொத்தம் 20 சதங்களை அடித்திருக்கிறார். இலங்கைக்கு எதிராக 17 சதங்களை அடித்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 12, இங்கிலாந்துக்கு எதிராக 9, நியூசிலாந்துக்கு எதிராக 9, ஜிம்பாப்வேக்கு எதிராக 8, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 7, பாகிஸ்தானுக்கு எதிராக 7, வங்கதேசத்துக்கு எதிராக 5, கென்யாவுக்கு எதிராக 4, நம்பீயவுக்கு எதிராக ஒரு சதம் என மொத்தம் 100 சதமடித்தவர் சச்சின்.
இதில் குறிப்பாக 1998-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் 3 சதமும் ஒருநாள் போட்டிகளில் 9 சதமும் அடித்து ஒரே ஆண்டில் 12 சதங்களை அடித்து வெளுத்தவர் டெண்டுல்கர்.
1996, 99, 2010 ஆகிய ஆண்டுகளில் ஒரே ஆண்டில் 8 சதங்களை அடித்தவர் சச்சின்.










