மும்பை: சச்சின் டெண்டுல்கர் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜாகிர்கான் சேர்க்கப்படவில்லை. ஸ்பின்னர் அமீத் மிஸ்ரா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி ஒரு நாள் மற்றும் டுவென்டி 20 போட்டிகளில் ஆடவுள்ளது. இதற்கான இந்திய அணித் தேர்வு இன்று நடந்தது. அதற்கு முன்பாகவே சச்சின் தான் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் முடிவை கிரிக்கெட்வாரியத்திற்கு அனுப்பி வைத்து விட்டார்.
இதனால் சச்சினைத் தேர்வுக் குழு பரிசீலிக்கவில்லை. அணியில் ஜாகிர்கான் சேர்க்கப்படவில்லை. அதேபோல வீரேந்திர ஷேவாக்கை டுவென்டி 20 போட்டிக்கு சேர்க்கவில்லை. ஒரு நாள் போட்டிகளில் மட்டும் ஷேவாக் ஆடுவார்.
டுவென்டி 20 அணி - டோணி, கெளதம் கம்பீர், அஜிங்கியா ரஹானே, யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, விராத் கோஹ்லி, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், அசோக் திண்டா, இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், பர்வீந்தர் அவானா, பையூஷ் சாவ்லா, அம்பட்டி ராயுடு.
ஒரு நாள் போட்டிக்கான அணி - டோணி, ஷேவாக், கம்பீர், கோஹ்லி, யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், இஷாந்த் சர்மா, அஜிங்கியா ரஹானே, அசோக் திண்டா, புவனேஸ்வர் குமார், ஷமி அகமது, அமீத் மிஸ்ரா.










