பெங்களூர்: இந்தியா- பாகிஸ்தான் இடையேயான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை பெங்களூரில் நடைபெறுகிறது. இதனால் பெங்களூர் நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது. நாளை பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
ரசிகர்கள் போர்வையில் தீவிரவாதிகள் ஊடுருவிவிடக் கூடாது என்பதற்காக பெங்களூர் நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மைதானம் பகுதியில் கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் சாதனை நாயகன் சச்சின் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெறுவதகா அறிவித்திருக்கும் நிலையில் நடைபெறும் முதல் போட்டி என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்திய அணி வீரர்கள்: ரகாஹா, கம்பீர், கோஹ்லி, யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, டோணி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, அசோக் திண்டா
பாகிஸ்தான் அணி வீரர்கள்: ஹபீஸ், அகமது ஷெஜாத், நசிர் ஜாம்ஷெத், உமர் அக்மல், கம்ரான் அக்மல், உமர் அமின், சோகிப் மாலிக், ஷகித் அப்ரிடி, உமர் கெளல், சொஹெய்ல் தன்வீர், சையத் அஜ்மல்










