Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు
 
Share This Story

''மிஸ் யூ சச்சின்''... இந்திய அணியினரின் ஏக்கப் பெருமூச்சு!

Posted by:
Published: Wednesday, December 26, 2012, 14:20 [IST]

''மிஸ் யூ சச்சின்''... இந்திய அணியினரின் ஏக்கப் பெருமூச்சு!
 

பெங்களூர்: சச்சின் டெண்டுல்கர் மீதான தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையிலான போஸ்டர் ஒன்றை நேற்று பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஒட்டியிருந்தது.

இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று பெங்களூரில் முதலாவது டுவென்டி 20 போட்டியில் விளையாடின. இதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின்போது தங்களது டிரஸ்ஸிங் ரூமுக்கு வெளியே இந்திய அணி சார்பில் ஒரு பெரிய போஸ்டர் தொங்க விடப்பட்டிருந்தது. அதில், மாஸ்டர் பிளாஸ்டர் உங்களை நாங்கள் நேசிக்கிறோம், உங்களை மிஸ் செய்கிறோம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

சச்சின் சமீபத்தில் ஒரு நாள் போட்டிகளிலிருந்து விடை பெற்றார் என்பது நினைவிருக்கலாம்.

English summary
Team India saluted master blaster Sachin Tendulkar for his contribution to the game on Tuesday during the first T20 against Pakistan at M Chinnaswamy Stadium, Bangalore by hanging a poster outside their dressing room. As the news of Sachin's ODI retirement broke, fans from all over the world reacted and saluted the master blaster for his contribution to the game and Team India was no different.

Please read our comments and moderation policy before posting

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil