Search
Newsletter
 
Share This Story

சென்னையில் பாகிஸ்தான் அணி வீரர்கள் முகாம்- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

Posted by:
Published: Thursday, December 27, 2012, 9:50 [IST]

Pakistan Cricket Players Chennai
 

சென்னை: இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியையொட்டி பாகிஸ்தான் வீரர்கள் நேற்று இரவு சென்னை வந்தனர்.

இந்தியா வருகை தந்துள்ள பாகிஸ்தான் அணி இரண்டு 20 ஓவர் போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுவதாக அறிவிக்கப்பட்டது. பெங்களூரில் நடைபெற்ற முதல் ஒரு ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது.

முதலாவது ஒருநாள் போட்டி வரும் 30-ந் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இதற்காக 7 பாகிஸ்தான் வீரர்கள் நேற்று இரவு சென்னை வருகை தந்தனர்.

பாகிஸ்தானுடனான போட்டிகளில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பு பலமாக இருக்க வேண்டும் என்று மத்திய உளவுப்பிரிவு போலீசார், சென்னை போலீசாரை எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் சென்னையில் போலீஸ் கமிஷனை நேரில் சந்தித்தும் மனுக் கொடுத்துள்ளார். சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. அங்கு மட்டும் 2,500 போலீசார் குவிக்கப்படுகின்றனர். 28-ந் தேதியில் இருந்து மைதானம் போலீஸ் கட்டுப்பாட்டில் வருகிறது.

வீரர்கள் மைதானத்திற்கு செல்லும்போது எந்திர துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படை வீரர்கள் உடன் செல்கின்றனர். வீரர்கள் எந்த வழியாக சென்றாலும் அந்த வழியில் மாறுவேட போலீசார் நிறுத்தப்பட்டு இருப்பர்.

இதனிடையே நேற்று இரவு பாகிஸ்தான் வீரர்கள் 7 பேர் சென்னை வருகை தந்துள்ளனர். அவர்கள் தங்கியுள்ள இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

English summary
Pakistan Cricket players were arrived in Chennai ahead of one day match on Dec.30
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil