Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు
 
Share This Story

இந்தியா, பாக் ஒரு நாள் போட்டி: தயாராகிறது சென்னை... பாதுகாப்புக்கு 7500 போலீஸ்

Posted by:
Published: Friday, December 28, 2012, 12:36 [IST]

இந்தியா, பாக் ஒரு நாள் போட்டி:  தயாராகிறது சென்னை... பாதுகாப்புக்கு 7500 போலீஸ்
 

சென்னை: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஒரு நாள் போட்டி ஜனவரி 30ம் தேதி சென்னையில் நடைபெறுவதையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 7500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பாகிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது. இரண்டு டுவென்டி 20 போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அது இந்தியாவுடன் விளையாடுகிறது. இதில் முதல் டுவென்டி 20 போட்டியில் வெற்றி பெற்று விட்டது.

சென்னையில் 30ம் தேதி முதலாவது ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ளது. சென்னையில் பாகிஸ்தான் அணிக்கு எந்தவிதப் பிரச்சினையும் வந்து விடக் கூடாது என்பதற்காக பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

கிரிக்கெட் போட்டிக்கான பாதுகாப்பு தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் என்.சீனிவாசன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு பலமாக இருக்கும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக 15 பட்டாலியன் போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

போட்டி நடைபெறும் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்துக்கும், வீரர்கள் தங்கும் நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கும் 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பாகிஸ்தான் அணியின் 7 வீரர்கள் புதன்கிழமை இரவே பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டதால், அந்த ஹோட்டலுக்கு இப்போதே பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

போட்டி நடைபெறும் மைதானத்தை வெள்ளிக்கிழமை முதல் போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். போட்டி நடைபெறும் அன்று மைதானத்துக்கு 4 அடுக்குகளாக 7,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மைதானத்துக்குள் செல்லும் அனைத்து ரசிகர்களும் மிகுந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

மைதானத்துக்குள் 218 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இரண்டு காலரிக்கு ஒரு காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படுகிறது. இதில் தலா 25 காவலர்கள் பணியில் இருப்பார்கள். இது தவிர உளவுத்துறை போலீஸார் ரசிகர்களுடன் சாதாரண உடையில் அமர்ந்திருப்பார்கள்.

இதேபோல வாகனம் நிறுத்துமிடத்திலும் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். மைதானத்தில் மொத்தம் 218 கேமரா பொருத்தப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டலில் இருந்து வீரர்கள் மைதானத்துக்கு வரும்போது கமாண்டோ வீரர்கள் பாதுகாப்புடன் அழைத்து வரப்படுவார்கள்.

போட்டியைக் காண பாகிஸ்தானிலிருந்து 500 ரசிகர்கள் சென்னை வருகின்றனர். இவர்களையும் தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களது வருகைக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே இவர்களை தங்களது நேரடிப் பாதுகாப்பு வளையத்திழ் கீழ் வைத்திருக்க போலீஸார் தீர்மானித்துள்ளனர்.

English summary
Heavy security has been planned to Chennai Indo -Pak ODI on Jan 30.

Please read our comments and moderation policy before posting

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil