Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు
 
Share This Story

2-வது 20 ஓவரில் இந்தியா வெற்றி- தொடர் சமனில் முடிவடைந்தது!

Posted by:
Published: Saturday, December 29, 2012, 10:45 [IST]

2-வது 20 ஓவரில் இந்தியா வெற்றி- தொடர் சமனில் முடிவடைந்தது!
 

அகமதாபாத்: பாகிஸ்தான் அணியுடனான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்றதால் 20 ஓவர் தொடர் சமனானது.

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் அணியுடனான முதல் 20 ஓவர் போட்டி பெங்களூரில் நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் வென்றது. 2-வது போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் காம்பிர் 21 ரன்களிலும், ரகானே 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.4-வது விக்கெட்டுக்கு இணைந்த யுவராஜ்-டோனி ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. யுவராஜ்சிங் ஹாட்ரிக் சிக்சர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். யுவராஜ் 36 பந்துகளில் 4 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 72 ரன்கள் குவித்தார்.கேப்டன் டோணி 33 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக ஆடினர். அந்த அணியின் ஹபீஸ் 26 பந்துகளில் 55 ரன்களை எடுத்தார். கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தது பாகிஸ்தான் இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

இதனால் 20 ஓவர் தொடர் சமனில் முடிவடைந்தது.

English summary
Yuvraj Singh cracked a dazzling 72 before the bowlers staged a brilliant recovery at the death overs as India clinched a nerve-wracking 11-run victory over arch-rivals Pakistan in the second T20 International to level the series 1-1 in Ahmedabad on Friday.

Please read our comments and moderation policy before posting

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil