Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు
 
Share This Story

2012ல் ஆதிக்கம் செலுத்திய இலங்கை கிரிக்கெட் வீரர்கள்-இந்தியா பெரும் சொதப்பல்!

Posted by:
Published: Tuesday, January 1, 2013, 15:42 [IST]

சென்னை: 2012ம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் வீரர்களே கிரிக்கெட் உலகில் சத்தம் போடாமல் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

ஒரு நாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இலங்கையைச் சேர்ந்தவர்களே பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் முன்னணியில் இருந்தனர். அதேபோல டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சில் இலங்கை வீரரே முன்னணியில் இருந்தார்.

இந்திய வீரர்கள் எந்த ஒருகிரிக்கெட்டிலும் உலக அரங்கில் இந்த ஆண்டு பிரகாசிக்கவில்லை. முற்றிலும் இருண்டு போன ஆண்டாக இந்த ஆண்டு இந்தியாவுக்கு அமைந்து போனது.

டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலுமே முதல் பத்து வீரர்களில் ஒருவர் கூட இந்தியர் இல்லை என்பது ரசிகர்களுக்குப் பெரும் சோகமான செய்தியாகும்.

ஒரு நாள் பந்து வீச்சில் மலிங்கா கலக்கல்

ஒரு நாள் போட்டி பந்து வீச்சில் இலங்கை வீரர் லசித் மலிங்காதான் முன்னணியில் இருந்தார். அவர் 32 போட்டிகளில் 47 விக்கெட்களைச் சாய்த்தார். மேற்கு இந்திய அணிகள் வீரர் சுனில் நரைன் 34 விக்கெட்களுடன் 2வது இடத்தைப் பிடித்தார். இலங்கை வீரர் திசரா பெரைரா 32 விக்கெட்களுடன் 3வது இடத்தைப் பெற்றார்.

டாப் 10 வீரர்களில் இந்தியாவுக்கு இடமில்லை

ஒரு நாள் போட்டிகளுக்கான பந்து வீச்சாளர்கள் வரிசையில் டாப் 10 இடத்தில் இந்தியர் ஒருவர் கூட இடம் பெறவில்லை என்பது சோகமானது.

பேட்டிங்கில் சங்கக்கரா டாப்

ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங்கில் இலங்கை வீரர் குமார சங்கக்கரா முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் மொத்தம் 1184 ரன்களை இந்த ஆண்டு குவித்தார். இதில் 3 சதம், 6 அரை சதம் அடக்கம்.

2வது இடத்தில் இலங்கையின் திலகரத்னே தில்ஷன் இடம் பெற்றுள்ளார். இவரது பங்கு 1119 ரன்கள் ஆகும்.

 

கோஹ்லிக்கு 3வது இடம்

இந்திய வீரர் விராத் கோஹ்லி இந்த வரிசையில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் 2012ம் ஆண்டில் 1026 ரன்கள் சேர்த்தார்.

கம்பீருக்கு 9வது இடம்

பேட்டிங் வரிசையில் இன்னொரு இந்திய வீரரும் டாப் 10 வீரர்களில் இருக்கிறார். அவர் கெளதம் கம்பீர். இவர் 685 ரன்களுடன் 9வது இடத்தைப் பிடித்துள்ளார்.

டெஸ்ட் பேட்டிங்கில் ஒரு இந்தியரும் இல்லை

டெஸ்ட் பேட்டிங்கைப் பொறுத்தமட்டில் இந்தியர் எவரும் டாப் 10 வீரர்களில் இல்லை. இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளர்க் முதலிடத்தில் உள்ளார். இவர் மொத்தம் 1595 ரன்களைக் குவித்தார்.

பந்து வீச்சிலும் இந்தியா சொதப்பல்

டெஸ்ட் பந்து வீச்சைப் பொறுத்தமட்டில் இலங்கை வீரர் ரங்கண ஹெராத் முதலிடத்தில் உள்ளார். அவர் மொத்தம் 10 போட்டிகளில் ஆடி 60 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதில் ஏழு முறை 5 விக்கெட்களையும், 2 முறை பத்து விக்கெட்களையும் அவர் சாய்த்தார்.

அஸ்வினுக்கு 12வது இடம்

டெஸ்ட் பந்து வீச்சில் ஜொலித்த முதல் பத்து பேரில் இந்தியர் ஒருவர் கூட இல்லை. இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் 37 விக்கெட்களை வீழ்த்தி 12வது இடத்தில் இருக்கிறார்.

English summary
Sri Lanka's Lasith Malinga emerged as the most successful bowler of 2012 in One Day Internationals. The Sri Lanka paceman headed the list with 47 wickets from 32 matches.

Please read our comments and moderation policy before posting

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil