நவிமும்பை: ரஞ்சிக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் விளையாட மும்பை அணி தகுதி பெற்றுள்ளது.
குஜராத்துடன் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை அணி இன்று டிரா செய்தது. இருப்பினும் புள்ளிகள் அடிப்படையில் அது காலிறுதிக்குள் நுழைந்தது.
முன்னதாக குஜராத்துடன் நடந்த போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பை மும்பை அணி சுதாரிப்பில்லாமல் ஆடியதால் தவற விட்டது. 135 ரன்கள் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் தத்தளித்தது மும்பை என்பது குறிப்பிடத்தக்கது.










